Respective: Nose Bleeding

டிசம்பர், 9: நமது உடலில் இருந்து சில நேரத்தில் இரத்தம் வெளியேறும். இது மூக்கு, காது, வாயில் இருந்து வெளியேறினால் நோயின் அறிகுறியாகவோ அல்லது ஆபத்து கொண்ட விளைவாகவோ இருக்கலாம். மூக்கில் (Nose Bleeding) சிறுவர்களில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கு அடிக்கடி இரத்தப்போக்கு ஏற்படலாம்.

இவை பாதிப்பிற்குள்ளாகும் நபருக்கு பயத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் அது மருத்துவர்களால் சோதனைக்கு பின்னர் சாதாரணமானது என்று கூட அறிவிக்க வைக்கலாம். மூக்கில் இரத்தம் வழிந்தால் எப்படி நிறுத்துவது என்பது குறித்த தகவலை இன்று விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

மூக்கு உடலில் உணர்திறன் கொண்ட பகுதி ஆகும். இது சிறிய இரத்த நாளத்தினால் நிரம்பியது. ஆதலால் எழுதியில் காயமடையும், மூக்கடைப்புக்கு வழிவகை செய்யும். மூக்கில் இருந்து இரத்தம் வழிய வறட்சி மிகமுக்கிய காரணம் ஆகும். வறண்ட & குளிர்கால நிலை காரணமாக மூக்கில் விரிசல் ஏற்படும்.

இந்த நிகழ்வு மூக்கில் இருந்து இரத்தம் வருதலுக்கு வழிவகை செய்யும். அடிக்கடி மூக்கினுள் கை, துணிகளை விடுத்து மூக்கு நரம்பினை காயப்படுத்தும். ஆதலால் மூக்கில் இருந்து இரத்தம் இரத்தம் வெளியேறும். Love Married Cine Stars: தமிழ் சினிமாவில் முதன் முதலில் காதல் திருமணம் செய்த நட்சத்திர ஜோடி யார் தெரியுமா?..! 

மூக்கில் இருந்து இரத்தம் வெளியேறுவதை தடுக்க மூக்கடைப்பு இருந்தால் மூக்கை சிறிதளவு ஈரப்பத்தப்படுத்த வேண்டும். வறண்ட வெப்பமான நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அதனைப்போல, மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படும் பட்சத்தில், முதலுதவிக்காக மூக்கின் கீழே மென்மையாக கிள்ள வேண்டும்.

படுக்காமல் நேராக உட்கார வேண்டும். பின்னர் வாய் வழியே அமைதியாக சுவாசித்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். இரத்தம் வருகிறது என்ற பயம் ஏற்பட்டதும் தலைகீழாக குனிவது போன்ற செயல்கள் கூடாது. அதேபோல, மூக்கை சில வினாடிகள் அடைத்து இரத்தத்தை வாய் வழியே துப்பிவிடலாம். இரத்தத்தை விழுங்காமல் இருக்க முயற்சிக்க வேண்டும்.

இவை அனைத்திற்கும் ஒழுங்குப்படாமல் இரத்தம் வழியும் பட்சத்தில் மருத்துவமனைக்கு விரைந்து செல்வது நல்லது. மூக்கில் இரத்தம் வழிதல் பெரும்பாலும் முதலுதவியிலேயே சரியாகிவிடும். ஆதிக்க இரத்தப்போக்கு ஏற்பட்டால் மருத்துவரை நாடுவதே நல்லது. அதேபோல, மூக்கில் இருந்து இரத்தம் வழியும் போது பதற்றப்பட்டால், அவை மேலும் இரத்த வெளியேற்றத்திற்கு வழிவகை செய்யும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 05:53 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).