Amman Movies (Photo Credit: @sridevisreedhar X)

ஜூலை 26, சென்னை (Cinema News): ஆடி மாதம் ஆன்மீகத்தில் முக்கிய மாதமாகவும், பெண் தெய்வங்களுக்கு உகந்த மாதமாகவும் கருதப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் திருவிழாக்களும் நடைபெற்று வருகிறது. கிராபுற திருவிழாக்களில் ஒலிப்பெருக்கிகளில் பக்தி பாடல்கள் காலையிலிருந்து ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆல்பம் பக்தி பாடல்களைத் தாண்டியும் படத்தில் வரும் அம்மன் பாடல்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் தெய்வீக படங்கள் பல இருந்தாலும், அம்மன் படங்களே பக்தியை நேரடியாக மக்களிடம் வெளிப்படுத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

அம்மன் (Amman): பல அம்மன் படங்கள் இருந்தாலும் மக்கள் மனதில் ஆழமாக பதிந்த படமாக 1995ல் வெளிவந்த அம்மன் என்னும் திரைப்படமே. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இப்படம் வெளியானது. இதில் அம்மன் குழந்தை வடிவமெடுத்து தன்னுடைய பக்தையின் துன்பத்திலிருந்து காப்பாற்றும் விதத்தில் படத்தின் கதை இருக்கும். இதில் அம்மன் வேடத்தில் நடித்திருந்த, ரம்யாகிருஷ்ணனை இன்னும் பலராலும் கண்முன் நிறுத்த முடியும் என்னும் அளவிற்கு அம்மனாக காட்சியளித்திருந்தார். பல 90ஸ் கிட்ஸ்கள், கிட்ஸாக இருக்கும் போது இப்படத்தின் வில்லனைப் பார்த்து பயப்படாமல் இருந்திருக்க மாட்டார்கள். Ajith Kumar Joins Yash’s KGF 3?: "சலாம் ராக்கி பாய்" கே.ஜி.எஃப் டைரக்டர் பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித்.. உருவாகும் கேஜிஎஃப் யூனிவெர்ஸ்..!

பாளையத்து அம்மன் (Palayathu Amman): நடிகை மீனா அம்மனாக நடித்து 2000 ஆண்டு வெளிந்த ‘பாளையத்து அம்மன்’ திரைப்படத்தின், ஆடி வந்தேன் ஆடி வந்தேன், பாளையத்து அம்மா, வேப்பிலை வேப்பிலை போன்ற பாடல்கள், அம்மன் கோவில்களில் தவறாமல் ஒலிக்கும். இந்த படத்தில் தனது பக்தையின் குழந்தையை வைத்து சதி செய்து குழந்தைக்கு கெடுதல் செய்து அம்மனின் சக்தியை அடைய நினைக்கும் சாத்தானை அழிப்பது போன்ற கதையைக் கொண்டிருக்கும்.

ராஜகாளி அம்மன் (Rajakali Amman): மீண்டும் ஒரு முறை ரம்யாகிருஷ்ணணின் அசாதாரனமான அம்மன் நடிப்பில் 2000 ஆண்டு ‘ராஜகாளி அம்மன்’ திரைப்படம் வெளியானது. இதில் வடிவேலு,கௌசல்யா அண்ணன், தங்கையாக அம்மனின் கோவிலில் வளருகின்றனர். கௌசல்யா தீய நபரை திருமண் செய்வதால் வரும் தீமைகளிலிருந்து காப்பற்றும் விதத்தில் படம் அமைந்துள்ளது. இப்படத்தில் அம்மனை அம்மவாகவும் தங்கையாகவும், உறவுகளை வைத்து அழைப்பதே மக்களுடன் ஒரு நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியது.

கோட்டை மாரியம்மன் (Kottai Mariamman): 2001ஆம் ஆண்டு வெளிவந்த கோட்டை மாரியம்மன் திரைப்படத்தில் அம்மன் வளர்க்கும் குழந்தையாகவும் அம்மனாகவும் இரட்டை வேடத்தில் நடிகை ரோஜா நடித்திருந்தார். அம்மனின் மேல் அதிக பக்தி வைத்திருந்த தேவையாணியை தீய எண்ணம் உடைய கிரணை திருமணம் செய்து பின் அவருக்கு வரும் கஷ்டங்களையும், அம்மனின் தங்க கண்களை திருட முயற்சிக்கும் தீய சக்திகளையும் அளிக்கும் விதத்தில் படம் அமைந்திருக்கும். Joker Folie a Deux Trailer Out: ஜோக்கர் என்ற ராட்சசனுக்குள் மலர்ந்த காதல்.. ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..!

படை வீட்டு அம்மன் (Padai Veetu Amman): 2001 ஆம் ஆண்டு வெளிவந்த படை வீட்டு அம்ன திரைப்படத்தில் மீனா, தேவயாணி நடிப்பில் வெளிவந்தது படை வீட்டு அம்மன் என்னும் திரைப்படம். மீனா இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். குறிசொல்லும் பெண்ணாக வரும் தேவயாணி காதலித்து ராம்கியை திருமணம் செய்து கொள்ல நினைக்கிறார், ஆனால் அவரின் குடும்பத்தார் தேவயாணியை திருமணட்திற்கு முன் கொன்று வெறு பெண்ணை மண முடிக்கின்றனர். அவர்களை அழித்து நீதியை நிலைநாட்டுவது போன்று படம் அமைந்திருக்கும். பல் டிவிஸ்டுகளுடம் இப்படம் இருக்கும்.

இந்த படங்கள் தியேட்டரையே கோவிலாக மற்றிய படங்களாக இருக்கிறது. இந்த படங்களின் வரிசையில் பொட்டு அம்மன், மா சக்தி, அம்மன் தாயி, பண்னாரி அம்மன், தாலி காத்த காளியம்மன், மகாசக்தி மாரியம்மன், கண்ணாத்தாள், ஆதிபராசக்தி, ஸ்ரீ ராஜ ராஜேஷ்வரி, நாகாத்தம்மன், மாரியாத்தா, காக்கும் காமாட்சி, நம்ம ஊரு எல்லையம்மன், மற்றும் நயன் தாராவின் மூக்குத்தியம்மன் என பல அம்மன் படங்கள் வெளியாகியிருக்கின்றன.