செப்டம்பர் 06, சென்னை (Kitchen Tips): மைசூர் பாக் என்பது கடலை மாவு மற்றும் உருகிய நெய் கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு சுவையாகும். பேக்கரி ஸ்டைல் மைசூர் பாக் (Mysore Pak) ரெசிபியை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அந்தவகையில் சுவையான மைசூர் பாக் எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
சர்க்கரை - 4 கப்
நெய் - 4 கப். Tasty Buns Recipe: ஓவன் இல்லாமல் பன் செய்வது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்..!
செய்முறை:
- முதலில் ஒரு சதுரமான தட்டில் நெய் தடவி வைத்துக் கொள்ளவும். பிறகு கடலை மாவை நன்றாக சலித்து, ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு, சர்க்கரையை போட்டு கொதிக்க விடவும். நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
- நன்கு கம்பிப்பதம் வர ஆரம்பித்த உடனேயே, ஒரு கையால் கிளறிக் கொண்டே மற்றொரு கையால் கடலைமாவை கொஞ்ச கொஞ்சமாகப் போட்டு கிண்ட வேண்டும். இல்லையெனில், கடலைமாவு கட்டி பிடித்து விடும்.
- கடலை மாவு சர்க்கரைப்பாகில் நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன், நெய்யை சிறிது சிறிதாக விட்டு, மறுபுறம் விடாமல் நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். சிறிது நேரத்தில் பாகு அடியிலிருந்து நுரைத்துக் கொண்டு வரும். மேலும், நன்றாக கிளறி விட்டு, நெய் தடவி வைத்த தட்டில் கொட்ட வேண்டும்.
- பின்னர், சிறிது நேரம் ஆற வைக்கவும். நன்றாக ஆறியவுடன், நெய் தடவிய கத்தியால் சதுரமாகவோ, அல்லது செவ்வகமாகவோ துண்டுகள் போடவும். அவ்வளவுதான் ருசியான மைசூர் பாக் ரெடி.