Bun (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 06, சென்னை (Kitchen Tips): பேக்கரிகளில் விற்கும் பன்னை நம்முடைய வீட்டிலேயே, முட்டை சேர்க்காமல், ஓவன் இல்லாமல் சுலபமாக செய்ய முடியும். பொதுவாகவே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த சாஃப்டான பன் (Tasty Bun), நம்முடைய வீட்டில் செய்தால் அம்மாக்களுக்கு அது மிகப் பெரிய சந்தோசத்தை கொடுக்கும். இந்த குறிப்பை முழுமையாக படித்து, இன்னைக்கு ஈவ்னிங் இந்த பன் ரெசிபியை, உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்

எண்ணெய் - 4 ஸ்பூன்

சோம்பு - 1/2 ஸ்பூன்

வெங்காயம் - 2

கேரட் - 1

முட்டைக்கோஸ் - 1 கப்

இஞ்சி விழுது - 1/2 ஸ்பூன்

மிளகாய் - 1

மஞ்சள்த்தூள் - கால் தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - அரை தே.கரண்டி

தனியா தூள் - ஒரு தே.கரண்டி

கரம் மசாலா - கால் தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. கொழுக்கட்டை செய்வது எப்படி? விவரம் உள்ளே..!

செய்முறை:

கோதுமை மாவை சப்பாத்தி சுடுவதற்கு பிணைவது போது பிணைந்து வைத்து அதன் மேலே சிறிது எண்ணெய் ஊற்றி ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சிறிது சோம்பு, ந.வெங்காயம், மெல்லிசாக நறுக்கிய ஒரு கேரட் மற்றும் ஒரு கைப்பிடி முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும். அதனுடன் சிறிது இஞ்சி விழுது, ஒரு பொடியாக நறுக்கிய ப.மிளகாய், சேர்த்து வதக்கவும். பின் கால் தேக்கரண்டி மஞ்சள்த்தூள், அரை தே.கரண்டி மிளகாய்த்தூள், ஒரு தே.கரண்டி தனியா தூள், கால் தே.கரண்டி கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து இதமான மணம் வரும் வரை வதக்கவும்.

பொடியாக நறுக்கிய மல்லித் தலையை சேர்த்து வதக்கி இறக்கவும். இதன் பின் மாவை சற்று தடிமனாக சப்பாத்தி போன்று தேய்த்துக் கொள்ளவும். அதில் சமைத்த கலவையை கொழுக்கட்டைக்கு வைப்பது போன்று வைத்து மூடி சற்று அழுத்த வேண்டும் பார்ப்பதற்கு பண் போன்று இருக்கும். இதை இட்லித் தட்டில் வைத்து 4 முதல் 5 நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும். பின் வெளியே எடுத்து, வாணலியில் இரண்டு தே.கரண்டி எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு, பொடியாக நறுக்கிய கறிவேப்பில்லை போட்டு பொரியவிடவும். இதில் நாம் செய்த காய்கறி வீட் பண்-னை சுட்டு எடுத்தால் சூடான காய்கறி வீட் பன்-னை சுவைக்கலாம்.