Kim Jong Un, North Korea President (Photo Credit: Facebook)

செப்டம்பர் 05, பியொங்யாங் (World News): வடகொரியாவில் (North Korea) கனமழை பெய்வதும், இதனால் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்வதும் தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் பெய்த கனமழையால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதில் 1,000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டமாகாணங்களில் உள்ள அதிகாரிகள் 30 பேருக்கு அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong Un, North Korea President) மரணதண்டனை விதித்ததாகவும், கடந்த மாதம் இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தென் கொரிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. Teachers' Day 2024: "உன் உழைப்பிற்கு ஈடு இவ்வுலகில் எதுவும் இல்லை.." தேசிய ஆசிரியர் தினம்..!

வட கொரியாவில் பத்திரிகைச் சுதந்திரம் முடக்கப்பட்டிருப்பதால் அந்நாட்டில் நடக்கும் சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளிவருவதில்லை. இந்தச்சூழலில், அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்த செய்தியை வட கொரியாவின் அண்டை நாடான தென் கொரியாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.