HUID (Photo Credit: Team LatestLY)

ஆகஸ்ட் 15, புதுடெல்லி (New Delhi): தங்கத்தின் மீதுள்ள மோகத்தை இந்திய மக்களிடமிருந்து பிரிக்க முடியாததாகும். நடுத்தர மக்கள் பாரம்பரியமாக வாங்கும் கடைகள், சலுகைகள் தள்ளுபடிகள் தரும் கடைகள் பார்த்து தான் நகைகள் வாங்குகிறார்கள். சிலர் மட்டுமே பெரிய நகைக் கடைகளில் வாங்குகின்றனர். ஆனால் எங்கு வங்கினாலும் மக்கள் தாங்கள் வாங்கும் நகைகள் கலப்படமில்லாத நகைகளா என் பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் மக்கள் தங்கத்தை அழகிற்காக வாங்குவதை விட அவசர காலத்தில் உதவும் பொருளாக பார்த்தே முதலீடு செய்கிறார்கள். தங்கத்தின் தரத்தை பொருத்தே கடன்களும் வழங்கப்படுகிறது.

ஹால்மார்க் முத்திரை: ஒரு தங்கம் கலப்படமில்லாத தூய்மையைக் காட்டுவதற்கு பயன்படுத்துவதே இந்த ஹால்மார்க் முத்திரை. இது இந்திய தர நிர்ணயக் கழகம் ஆங்காங்கு அசேயிங் & ஹால்மார்க் சென்டர் (AHC) வைத்து, பிஐஎஸ் ஹால்மார்க் சோதனை செய்து சான்றளிக்கிறது. இதில் பல வகைகளில் முத்திரைகள் வழங்கப்படுகிறது. தற்போது முத்திரையுடன் 6 இலக்க (HUID) எண் இல்லாமல் விற்கப்படும் தங்க நகைகளுக்கு ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு தடை செய்துள்ளது. தற்போது பயன்பாடில் உள்ள 4 இலக்க எண்களை, 6 இலக்க HUID எண்களாக மாற்றி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி கடைகளில் 4 இலக்க எண்ணைக் கொண்ட நகைகளை விற்ககூடாது. Paramount Layoffs: பாரமவுண்ட் குளோபல் நிறுவனத்தின் 15 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்..!

ஹால்மார்க் சென்டரில் ஒவ்வொரு நகைகளையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து அதற்கான எண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு நகைக்கும் தனித்தனி HUID எண்கள் இருக்கும். இது நுகர்வோருக்கு நம்பிக்கையையும் வெளிப்படைத் தன்மையையும் அளிக்கிறது. இந்த எண்ணை வைத்து, அதன் தரத்தை BIS care appல் கண்டறிய முடியும். போலியான HUID நகைகளில் குறிப்பிட்டிருந்தால், BIS care appல் புகாரும் அளிக்க முடியும். இனி வாங்கும் தங்க நகைகளில் 6 இலக்க எண்கள் இருக்கிறதா என்று கவனித்து வாங்க வேண்டும். இதனால் எளிதாக போலி மற்றும் கலப்படமற்ற நகைகளை தவிர்த்து நல்ல தரமான நகைகளை வாங்கலாம்.