Ganesh Chaturthi 2024 (Photo Credit: @srkpashramam X)

செப்டம்பர் 07, சென்னை (Chennai): உலகெங்கும் வாழும் இந்துக்களால் பெருவாரியாக சிறப்பிக்கப்படும் விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chathurthi), இன்று கொண்டாடப்படுகிறது. 07 செப்டம்பர் 2024 அன்று, இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி சிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் முழுமுதற் கடவுளாக இருக்கும் ஆணை முகத்தானை, இன்று பலரும் விரதம் இருந்து வழிபடுவார்கள். நற்பயன்கள் பெறுக, தீவினைகள் விலக அருள்புரியும் கணேசன் (Ganesh Chathurthi), பல இடையூறுகளை நீக்கி வாழ்க்கைக்கு நல்வழியை அருளுவதால் அன்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் ஆவார். Vinayagar Chathurthi 2024: சங்கடங்களை தீர்க்கும் கற்பகநாத கணபதி; 2024 விநாயகர் சதுர்த்தி நல்ல நேரம், வழிபாடு முறைகள் விவரம் இதோ.!

விநாயகர் சதுர்த்தி நல்லநேரம்:

இன்று வீட்டில் விநாயகர் சதுர்த்தியை சிறப்பிப்போர் விரதம் இருந்து வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், கொழுக்கட்டை, அவல், பொறி, சுண்டல், சர்க்கரைப்பொங்கல், சோறு, பழங்கள் ஆகியவற்றை வைத்து வழிபடலாம். விநாயகருக்கு உகந்த எருக்கம்பூ மாலை, அருகம்புல் மாலை ஆகியவற்றையும் சாற்றி மனமுருகி வழிபாடு செய்யலாம். இன்று விநாயகர் சதுர்த்தி வளர்பிறை திதியில் காலை 07:45 மணிமுதல் 08:45 மணிவரையிலும், பின் காலை 10:30 க்கு மேலும் வழிபாடு நடத்தலாம்.

விநாயகர் வழிபாட்டின்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள் சிலவற்றை உங்களுடன் பகிறுகிறோம். வழிபாட்டின் போது மட்டுமல்லாது, தினமும் இதனை பூஜித்தால் விநாயகனின் அருளால் நன்மையே கிட்டும்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்

ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே!

ஓம் தத்புருஷாய வித்மஹே

வக்ரதுண்டாய தீமஹி

தன்னோ தந்தி ப்ரசோதயாத்!

வக்ரதுண்டாய ஹீம்

ஓம் நமோ ஹேரம்ப மதமோதித

மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா

ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ!