Full Moon 2024 (Photo Credit: @NASA X)

ஆகஸ்ட் 20, கலிபோர்னியா (World News): வானியல் விந்தை என்பது எண்ணிலடங்காத பல்வேறு வியப்பூட்டும் நிகழ்வுகளை அடையாளமாக கொண்டவை. இவற்றின் ஒவ்வொரு செயல்பாடுகளும் நம்மை வியக்கவைக்கும். அந்த வகையில், ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் சூப்பர் மூன் எனப்படும் முழு நிலவு நாள், ஆகஸ்ட் 19, 2024 (நேற்று) தோன்றியது. இந்த நாளில் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து செல்லும். NASA Alert!: 1 மில்லியன் மைல் வேகத்தில்.. பூமியை நோக்கி வரும் சிறுகோள்.. எச்சரிக்கை விடுத்த நாசா..! 

பூமியின் துணைக்கோளான சந்திரன், பூமியையும் சுற்றிக்கொண்டு தன்னைத்தானே சுற்றியவாறு பயணம் செய்கிறது. அந்த வகையில், சூப்பர் மூன் நாளில், சந்திரன் பூமிக்கு 90% அருகில் வந்து சென்றது. அமெரிக்கா, கிரீஸ் போன்ற நாடுகளில் இவை மக்களால் எளிதில் கண்களால் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக அமைந்து இருந்தது. அதன் சில காணொளிகள் உங்களின் பார்வைக்காகவும் இணைக்கப்பட்டுள்ளது.

நாசா பதிவு செய்து வெளியிட்ட புகைப்படம்:

இஸ்தான்புல்லில் (Istanbul Supermoon) இருந்து எடுக்கப்பட்ட காணொளி:

போர்ச்சுகளில் (Portugal Supermoon) எடுக்கப்பட்ட காணொளி:

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கோச்செல்லா வேலியில் சூப்பர்மூன்: