செப்டம்பர் 06, மயிலாப்பூர் (Chennai News): சென்னையில் உள்ள மயிலாப்பூரில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி (Adi Dravidar Boys Hostel) செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து நந்தனம் அரசு கலைக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் தங்கியுள்ள 40 மாணவர்களுக்கு மதிய உணவின்றி இருப்பதாக தகவல் தெரியவந்தது. Jewellery Theft: வீடு வீடாக சென்று கொள்ளையடித்த திருட்டு பாட்டி.. சென்னை மக்களே உஷார்.!
இதனையடுத்து அங்கு சென்ற செய்தியாளரிடம், விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் தங்களது குறைகளை எடுத்துரைத்தனர். அதில், மாணவர்கள் தினம்தோறும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாக கூறினர். கடந்த 3, 4 ஆண்டுகளாக விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள், சரியான உணவின்றி தவித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், அரசு வழங்கும் உதவித்தொகை மாணவர்களுக்கு வரவில்லை எனவும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். குடிக்க தண்ணீர் வசதியும் சரிவர இருப்பதில்லை எனவும், விடுதி அறையில் மின்விளக்கு மற்றும் மின்விசிறி (Fan) இயங்காத நிலையில் உள்ளது எனவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, விடுதியின் மாடியில் வெளியாட்கள் இரவு நேரத்தில் வந்து மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை போட்டு செல்வதாக தெரிவித்தனர். இதுகுறித்து விடுதி வார்டன் (Hostel Warden) அகிலாவிடம் மாணவர்கள் புகார் தெரிவிக்கையில், அவர் விடுதியில் இருந்து வெளியேற்றிடுவேன் என மாணவர்களை மிரட்டியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.