Giant Cracks in Los Angeles (Photo Credit: @republic X)

செப்டபர் 06, லாஸ் ஏஞ்சல்ஸ் (World News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா (California Cracks), உட்டாஹ், அரிசோனா உட்பட பல மாகாணங்களில் கடந்த 40 ஆண்டுகளாக நிலங்களில் திடீரென மிகப்பெரிய அளவிலான விரிசல் என்பது ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள நிலங்களில் இருந்து, ஆழ்துளை கிணறுகள் வாயிலாக அளவுக்கு அதிகமாக தொடர்ந்து எடுக்கப்பட்ட நீர் காரணமாக, இவ்வாறான நில விரிசல்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

1999 க்கு பின் தீவிரமாக அதிகரித்த பிரச்சனை:

விரைவில் இந்த விசயத்திற்கு தீர்வு கண்டுபிடிக்கப்படாத பட்சத்தில், அமெரிக்காவின் தென் மாகாணங்களில் கடுமையான நிலச்சரிவு பிரச்சனையை எதிர்கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1999ம் ஆண்டு நிலங்களில் ஏற்படும் விரிசல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில், அப்போதே மொத்தமாக 169 மைல் தூரம் அளவுக்கு நிலங்களில் விரிசல் உண்டாகியது உறுதி செய்யப்பட்டது. Kim Jong Un Executes 30 Officials: வெள்ளத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி அதிகாரிகளுக்கு மரணம்.. வடகொரிய அதிபரின் மிரட்டல் தண்டனை..! 

நிலங்களில் விரிசல்:

காலப்போக்கில் நிலங்களில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் மேலும் அதிகரிக்க தொடங்கி புதிய நீர்வழித்தடங்களையும் மழைக்காலங்களில் உண்டாக்கியது. இதனால் சில நேரம் தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவிலான விரிசல்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில், சமீபத்தில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) நகரில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் நிலங்களில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது.

ஆய்வு நடந்தும் அதிகாரிகள்:

குறிப்பாக கடந்த காலங்களில் நிலநடுக்கத்தை தொடர்ந்து நிலங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஒருசில நேரம் நிலநடுத்திற்கு முன்பும் விரிசல்கள் தென்பட்டுள்ளன. இதனால் மீண்டும் அங்கு மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படவுள்ளதா? அல்லது வேறு காரணமா? என்பது தெரியாமல் மக்கள் குழம்பி இருக்கின்றனர். நிலவெடிப்புகள் குறித்த டிரோன் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

2012 படம் நினைவிருக்கா?

கடந்த 2009ம் ஆண்டு ரோலண்ட் எம்மெரிச் இயக்கத்தில், 2012 என்ற படம் ஒன்று வெளியானது. இந்த படத்தில் அமெரிக்காவில் தொடங்கும் மிகப்பெரிய அளவிலான நில விரிசல்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். ஒருகட்டத்தில் நிலம் மொத்தமாக பெயர்ந்து, கடல்கோள் அமெரிக்காவை ஆட்கொள்ளும். இறுதியில் உலகம் முழுவதும் கடல் மனிதர்களை ஆட்கொண்டு, புதிய நிலப்பரப்பை உண்டாக்கும். தப்பியவர்கள் எதிர்கால சந்ததியின் தொடக்கமாக கருதப்படுவார்கள். இந்த படத்தின் காட்சிகளை போலவே, கலிபோர்னியா உட்பட பல மாகாணங்களில் அங்கு விரிசல்கள் தோன்றி வருகின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸில் சமீபத்தில் ஏற்பட்ட வெடிப்புகள்: