செப்டம்பர் 07, சென்னை (Kitchen Tips): கிராமப் புறங்களில் பொதுவாக கருவாட்டு (Dry Fish) குழம்பை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். எப்போதும் போல குழம்பு செய்யாமல், சற்று வித்தியாசமாக கருவாடு தொக்கு (Karuvadu Thokku) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். இதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கருவாடு - 10 துண்டுகள்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு. Mysore Pak Recipe: பேக்கரி சுவையில் மைசூர் பாக் செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
செய்முறை:
முதலில் கருவாட்டை சுடுநீரில் போட்டு 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலசி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
பின்பு, அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறிவிட்டு, கருவாட்டை சேர்த்து மசாலாவுடன் சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறிவிடவும்.
பிறகு, அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு, தண்ணீர் வற்றியதும் இறக்கினால், சுவையான கிராமத்து கருவாடு தொக்கு ரெடி.