Peanut Podi (Photo Credit: YouTube)

செப்டம்பர் 07, சென்னை (Kitchen Tips): இட்லி, தோசைக்கு ஏற்ற சத்தான வேர்க்கடலை பொடியில் (Verkadalai Podi) நல்லெண்ணையை ஊற்றி இட்லியில் பிரட்டி சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். அப்படிப்பட்ட வேர்க்கடலை பொடி (Peanut Podi) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை - அரை கப்

கடலைப்பருப்பு - கால் கப்

வரமிளகாய் - 10

பூண்டு பல் - 5

கறிவேப்பிலை - 2 கொத்து

எண்ணெய் - 1 கரண்டி

உப்பு - தேவையான அளவு. Karuvadu Thokku Recipe: கிராமத்து ஸ்டைலில் சுவையாக கருவாடு தொக்கு செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் போட்டு வறுத்த பின்னர் வேர்க்கடலை (Peanut), கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும்.

வேர்க்கடலையும் கடலைப்பருப்பும் பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

பின் கடாயில் இருக்கும் பொருட்களை ஒரு தட்டில் கொட்டி நன்றாக ஆறவைக்க வேண்டும். நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு, அதோடு பூண்டு பல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வளவுதான் சுவையான காரசாரமான வேர்க்கடலை பொடி தயார்.