செப்டம்பர் 06, ஒடுகத்தூர் (Vellore News): வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒடுகத்தூர், சேர்பாடி, பொம்மன்குட்டை கிராமத்தில் வசித்து வருபவர் ஜீவா என்ற சேட்டு (வயது 30). இவரின் மனைவி டயானா (வயது 25). தம்பதிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவருக்கும் 2 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது.
அழகிய பெண் குழந்தை:
இதனிடையே, சமீபத்தில் இரண்டாவது முறையாக கருத்தரித்த டயானாவுக்கு, கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் அடைந்து பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பின்னர், டயானாவுக்கு இரத்த அளவு குறைந்ததைத்தொடர்ந்து, அவர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். Sivaganga Shocker: முன்விரோத தகராறில் இளைஞர் கொடூர கொலை; கண்மாயில் சடலமாக மீட்கப்பட்ட உடல்.!
பப்பாளி பால் ஊற்றி கொலை:
சிகிச்சை நிறைவுபெற்று தாய்-சேய் இருவரும் பூரண நலனுடன் புதன்கிழமையன்று வீட்டிற்கு திரும்பி இருக்கின்றனர். இதனிடையே, ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துவிட்டது என தம்பதிகள் வருத்தத்தில் இருந்ததாக தெரியவருகிறது. இதனால் மருத்துவ சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு வந்த தம்பதி, பப்பாளி மரத்தில் இருந்து பால் எடுத்து குழந்தைக்கு கொடுத்துள்ளனர்.
உறவினர்களிடம் நாடகம்:
இதனால் சிறிது நேரத்திற்குள்ளாக குழந்தை இறந்துவிட, கொலையை மறைக்க தம்பதி திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும், டயானாவின் பெற்றோருக்கு தொடர்புகொண்டு, தனது முதல் குழந்தை விளையாட்டுத்தனமாக தங்கையை போர்வையுடன் அமுக்கியதால் இரண்டாவது மகள் இறந்துவிட்டதாக நாடகமாடி இருக்கின்றனர்.
டயானாவின் பெற்றோர் சந்தேகம்:
பதறிப்போன பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது, கொலை செய்யப்பட்ட குழந்தையை வீட்டிலேயே பள்ளம் தோண்டி புதைத்து இருக்கின்றனர். டயானாவின் பெற்றோர் மகளின் செயல்பாடுகளில் சந்தேகமடைய, பப்பாளி மரத்தின் கிளைகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் பேத்தியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எண்ணியுள்ளனர். Anbil Mahesh Poyyamozhi: சென்னை அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய ஆன்மீக சொற்பொழிவு விவகாரம்; பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதி.!
தம்பதி தலைமறைவு:
இதனையடுத்து, டயானாவின் தந்தை சரவணன் தனது மகள், மருமகள் மீது வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், குழந்தை இறந்த துக்கத்தில் இல்லாமல், மாடுகளுக்கு தீவனம் வைப்பது, வீட்டு வேலை செய்வது என இருந்துள்ளனர். இதனிடையே, தம்பதிகள் இருவரும் திடீர் தலைமறைவாகினர்.
மூவர் கைது:
இதனால் இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. குழந்தையின் உடலும் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் குழந்தைக்கு உடல் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருள் கொடுத்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, தலைமறைவான தம்பதிகளை அதிகாரிகள் இன்று கைது செய்தனர். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த உறவினர் ஒருவரையும் கைது செய்தனர்.