Couple (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 06, சென்னை (Chennai): காதலிக்கும் போது அவரவருக்கு தனித்தனியாக வரவும் செலவும் இருக்கும். ஆனால் இருவரும் இணைந்து வாழும் போது (Couples) தான் நிதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். இணைந்து வாழப்போகும் ஜோடிகள் முதலிலேயே நிதி சார்ந்த கேள்விகளையும், நிதித் திட்டமிடுதல் (Financial Planning) பற்றியும் பேசுவது மிகச் சிறந்தது. பணம் தொடர்பான சரியான திட்டமிடுதல் இருந்தாலே தம்பதிகளுக்கும் பிரச்சனை ஏற்படுவது குறைந்து விடும்.

புரிதல்: முதலில் இருவரும் அவரவரின் பணத்தை பற்றிய புரிதலை தெரிவிக்க வேண்டும். இருவரும் எவ்வாறு பணத்தை கையாள்வீர்கள், தங்கள் வீடுகளின் இதுவரை எப்படி பணத்தை கையாள்வார்கள் என்று தெரிவிக்க வேண்டும். இருவரும் தங்களுடையை சேமிப்பு பழக்கம் அல்லது செலவு செய்வதையும், நிதித் தேவையயும் சொல்ல வேண்டும். இது வரை ஒருவருக்கும் மட்டும் கடன் இருக்கிறதென்றால் தற்போது அதை இருவரும் சேர்ந்து அடைக்க வேண்டுமா அல்லது அவரே பார்த்துக் கொள்வார்களா என முன்பே முடிவு செய்ய வேண்டும். மற்ற இஎம்ஐ, கிரிடிட் கார்ட்டு மெயிண்டனன்ஸ் போன்றவற்றையும் சொல்லிவிட வேண்டும். மற்றும் இன்சூரன்ஸ், டாக்குமண்ட் என அனைத்து நிதி சார்ந்தவை பற்றி இருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். Government Schemes: விவசாயிகளுக்கு 50% மானியத்தில் மின்சார பம்புசெட்.. விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே..!

பட்ஜெட் போடுதல்: வீட்டுக்கென்று நேரம் ஒதுக்கி பட்ஜெட் போடுவது (Organizing Money and Objectives) ஆரோக்கியமான உறவுக்கு மிக அவசியம். நிதிப் பொறுப்புகளில் சமமாக பங்ககெடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் நிதிக்கு இலக்குகளை வைத்து சேமிக்கலாம். உதராணமாக குறிபிட்ட காலத்திற்கு பணத்தை சேமித்து வைத்து, வீட்டுகடன் அடைக்க அல்லது அடமானப் பொருளை மீட்க, வாகனம் வாங்க என அதற்காக தனியாக இலக்கு நிர்ணயித்து சேமிக்க வேண்டும். அடிக்கடி, ஏற்படும் வரவு செலவுகளைப் பற்றி கட்டாயம் பேச வேண்டும். சண்டையில்லாமல் அடிக்கடி பணத் தேவையை பற்றி பேசுவது மிக கடினம் என்றாலும் அப்போது தான் இருவரின் பணத் தேவையும் வீட்டு செலவுகளும் இருவருக்கும் புரியும்.

சேமிப்பு: இருவரும் வருமானம் ஈட்டும் போது நிச்சயம் வருங்காலத்திற்காக சேமிப்பை உறுதி செய்யலாம். அதனால் வருங்காலத்திற்கு எவ்வளவு சேமிக்க வேண்டும், எதில் சேமிக்க வேண்டும், எதில் முதலீடு செய்யலாம், குழந்தைக்கான சேமிப்பா, மருத்துவ காப்பீடா என அனைத்தும் சேர்ந்து திட்டமிட்டு செய்வது மிகச் சிறந்ததாகும். அவசர காலத்திற்கென்றே நிதியை சேமிக்க வேண்டும். இதற்காக இருவரும் சேர்ந்து ஒரு ஜாயிண்ட் பேங் அகவுண்ட் ஓபன் செய்து சேமிக்கலாம். ஏனெனில் இருவரில் ஒருவருக்கு வேலையிழப்பு ஏற்பட்டாலோ, அல்லது திடீர் செலவுகள் செய்ய நேரிடும் தருணத்தைத் தவிர்க்க அவசர நிதியை சேமிப்பது அவசியம். இது உங்கள் ஒற்றுமையையும் பலப்படுத்தும்.