Tomorrow Weather (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 06, சென்னை (Chennai): சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா, அதை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாளில் வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். வடக்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

நாளைய வானிலை (Tomorrow weather): தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் (The Chennai Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Sivaganga Shocker: முன்விரோத தகராறில் இளைஞர் கொடூர கொலை; கண்மாயில் சடலமாக மீட்கப்பட்ட உடல்.!

மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்றும் நாளையும் (செப்டம்பர் 5, 6 ) தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திரகடலோரப்பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.