Manika Batra | Sharath Kamal File Pic (Photo Credit: @3acesindianews X)

செப்டம்பர் 05, புதுடெல்லி (Sports News): ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (Asian Table Tennis Championship) தொடர் அக்டோபர் 07-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை கஜகஸ்தானில் (Kazakhstan) உள்ள அஸ்தானா (Astana) நகரில் நடைபெறுகிறது. இந்த 27-வது தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆடவர் அணிக்கு சரத் கமல் (Sharath Kamal) கேப்டனாகவும், மகளிர் அணிக்கு மணிகா பத்ரா (Manika Batra) கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். Paralympics 2024: பாராலிம்பிக்ஸ் 2024.. வெண்கல பதக்கம் வென்று தங்கவேலு மாரியப்பன் சாதனை..!

ஆடவர் அணியில் மாற்று வீரர்களாக ஸ்நேஹித் எஸ்எஃப்ஆர், ஜீத் சந்திரா ஆகியோர் உள்ளனர். மகளிர் அணியில் மாற்று வீரர்களாக யஷஸ்வினி கோர்படே, பொய்மண்டீ பைஸ்யா சேர்க்கப்பட்டுள்ளனர். உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான முக்கியமான தகுதிசுற்றாக ஆசிய சாம்பியன்ஷிப் அமைந்துள்ளது. இதனால், இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆடவர் அணி: சரத் கமல் (கேப்டன்), மானவ் தாக்கர், ஹர்மீத் தேசாய், சத்தியன், மனுஷ் ஷா.

மகளிர் அணி: ஸ்ரீஜா அகுலா, மணிகா பத்ரா (கேப்டன்), அய்ஹிகா முகர்ஜி, தியா சித்தலே, சுதிர்தா முகர்ஜி