Mushroom biryani (Photo Credit: YouTube)

ஜூலை 26, சென்னை (Kitchen Tips): தினமும் சாப்பிட்டாலும் அலுக்காத ஒரே உணவு பிரியாணி. வார இறுதி என்றாலே கொண்டாட்டம்தானே.. கொண்டாட்டம் என்றாலே பிரியாணிதானே. இந்த வார வீக் எண்டுக்கு காளான் பிரியாணி (Mushroom biryani) சமைத்து அசத்துங்கள். Cowpea Curry Recipe: தட்டப்பயறு குழம்பு மணக்க மணக்க இப்படி செய்ங்க.. எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!

தேவையான பொருட்கள்:

காளான் – 1/2 கிலோ

பாசுமதி அரிசி – 2 கப்

வெங்காயம் – 1 (வெட்டியது)

தக்காளி – 2 (வெட்டியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

தேங்காய் பால் – 1/2 கப்

தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

மல்லி தூள் – 2 டீஸ்பூன்

சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

பிரியாணி இலை – 1

ஏலக்காய் – 3

இலவங்கம் – 2

கிராம்பு – 5

தண்ணீர் – 3 கப்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – 1/4 கப் (வெட்டியது)

புதினா – 1/4 கப் (வெட்டியது)

பச்சை மிளகாய் – 3 (வெட்டியது)

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

நெய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

அரிசியை கழுவி அந்த அரிசியில் 1/2 எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு கலக்க வேண்டும். கசகசாவை நீரில் ஊற வைத்து பின் அதனுடன் முந்திரி பருப்பைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயத்தையும், மிளகாயையும் அரைத்துக் கொள்ள வேண்டும். காளானை தேவையான அளவு கட் பண்ணி வைத்து கொள்ள வேண்டும். பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும். Walking Tips: உணவு சாப்பிட்டபின் சின்ன வால்கிங் பயணம்; ஏற்படும் நன்மைகள் தெரியுமா?.!

இப்போது குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும். அது காய்ந்தவுடன் நாம் அரைத்து வைத்து இருந்த பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும். பின் கட் பண்ணி வைத்த காளானை போட்டுத் வதக்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து வதக்கவும் பின் அரைத்து வைத்த கசகசா முந்திரியை சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்து வைத்து இருக்கும் மசாலாவை சேர்க்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, நெய், மஞ்சள் சிறுதி எண்ணெய் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு தேங்காய்ப்பாலும் சேர்க்க வேண்டும்.

அதனுடன் ஊற வைத்த பிரியாணி அரிசியை குக்கரில் போட்டு கிண்டி மூடிவிட வேண்டும். ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் கழித்து நிறுத்தி விடவும். ஆவி நின்றவுடன் குக்கரைத் திறந்து பிரியாணியை வேறு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும் அதனுடன் பொடியாக நறுக்கி வைத்திருந்த மல்லி மற்றும் புதினா இலைகளை சேர்த்து ஒரு முறை கிளறி விட வேண்டும். அவ்வளவு தான், காளான் பிரியாணி ரெடி.