Cowpea Curry (Photo Credit: YouTube)

ஜூலை 25, சென்னை (Kitchen Tips): கறி சுவையை விட சில சமயங்களில் சைவ குழம்புகள் அவ்வளவு ருசியாக இருக்கும். அந்த வகையில் தட்டைப்பயறு குழம்பும் ஒன்று! வீடு மணக்கும் இந்த தட்டைப்பயிறு குழம்பு சூடான சாதத்துடன் சாப்பிடும் பொழுது எப்படி இருக்கும் தெரியுமா? இந்த தட்டைப்பயிறு குழம்பு (Cowpea Curry) எப்படி செய்வது? என்று இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்:

தட்டப்பயிறு- 1 கப்

கத்திரிக்காய்- 5

துருவிய தேங்காய்- 3 ஸ்பூன்

சின்ன வெங்காயம்- 7

பூண்டு- ஆறு பல்

பெரிய தக்காளி- 1

புளி- சிறிய நெல்லிக்காய் அளவு

சாம்பார் பொடி- 2 ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்

கடுகு- சிறிதளவு

வரமிளகாய்- 3

கருவேப்பிலை- 10 இலைகள்

பெருங்காயம்- தேவையான அளவு

எண்ணெய்- தேவையான அளவு World Embryologist Day 2024: உலக ஐவிஎப் தினம்.. ஐவிஎப் என்னும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை என்றால் என்ன? விபரம் உள்ளே..!

செய்முறை:

தட்டப்பயறு லேசாக வறுத்து கழுவி குக்கரில் போட்டு தேவையான நீர் விட்டு 5 விசில் விடவும். அதே நேரம் கத்திரிக்காய், வெங்காயம், பூண்டு, தக்காளியை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வைக்கவும். மேலும் ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து கரைத்து வைக்கவும்.

பின்னர் ஒரு வாணலியில் கடுகு, வரமிளகாய், பூண்டு ஆகியவைகளை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். மேலும் தக்காளி மற்றும் கத்திரிக்காய் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன், சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கி, வெந்த தட்டப்பயறை சேர்த்து சிறிதளவு நீர் விட்டு வேகவிடவும். கத்திரிக்காய் வெந்ததும் தேவையான புளி கரைசலை ஊற்றவும். Meta Removes 63,000 Facebook Accounts: சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட 63000 முகநூல் கணக்குகள் நீக்கம்; மெட்டா அதிரடி.!

பின்னர் அதனுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விடவும். அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க விடவும். அவ்வளவு தான், சுவையான தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு தயார். நீங்களும் செய்து பாருங்கள்.