Hibiscus Flower (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 12, சென்னை (Health Tips): செம்பருத்தி தாவரத்தின் அனைத்து விதமான பாகங்களும் பல்வேறு மருத்துவ குணங்கள் (Medicinal Benefits) கொண்டதாகும். எந்தவித பக்கவிளைவுகளும்,பாதிப்புகளும் இல்லாதது ஆகும். செம்பருத்தி இலை மற்றும் பூக்கள், தலைமுடி வளர்ச்சிக்கும், பொடுகு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது. மேலும், கூந்தலின் கருப்பு நிறத்தை பாதுகாக்க தேங்காய் எண்ணெயில் செம்பருத்தியின் காய்ந்த மொட்டுகளை போட்டு ஊற வைத்து, தொடர்ந்து தடவி வர வேண்டும். Young Girls Died In River Flood: ஆற்றில் குளிக்கும் போது நேர்ந்த சோகம்; வெள்ளத்தில் சிக்கி 2 இளம்பெண்கள் பலி..!

செம்பருத்தி பூவை கொதிக்க வைத்து தேநீராக அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் சீராக செயல்படும். ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைத்து, உடலுக்கு குளிர்ச்சி அளித்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். மேலும், சரும அழகை பாதுகாக்கும். செம்பருத்தி பூக்களின் இதழ்களை மென்று தின்று, தண்ணீர் பருகினால் வயிற்றுப்புண் சரியாகும். ரத்தம் சுத்தமாகும், இதயம் வலுப்பெறும். 100 கிராம் செம்பருத்தி இதழ்களை 400 மில்லி நல்லெண்ணையில் கலந்து பாத்திரத்தில் வைத்து மூடி 10 நாட்கள் கழித்து எடுத்து தினமும் காலை மாலை என இந்த தையலத்தை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கி கூந்தல் வலுவடையும்.

இருதய நோயாளிகள் வெள்ளைத் தாமரையின் இதழ் மற்றும் செம்பருத்தி இதழ் ஆகியவற்றை பாலில் கலந்து பருகி வந்தால், ரத்த குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமடையும். இது சிறுநீர் கோளாறு பிரச்சனைகளையும் சரிசெய்ய உதவுகிறது. மேலும். சருமத்தை பாதுகாத்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.