ஏப்ரல் 12, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் கரிம்புழா ஆறு உள்ளது. இதில், கூட்டி லக்கடவு எனும் பகுதியில் ஒரு சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அதில், கரக்குறிச்சியை சேர்ந்த அபுபக்கர் என்பவரின் மகள் டிமா மெப்பா (வயது 20), செர்புளச்சேரி குட்டிக்கோடு பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பவரின் மகள் ரிஸ்வானா (வயது 19) என்ற இரண்டு இளம்பெண்கள், இவர்களோடு பாதுஷா என்ற சிறுவன் என மொத்தம் 3 பேர் அந்த ஆற்றில் மூழ்கியுள்ளனர். Wild Elephant Into The Well: கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை; மீட்புப் பணிகள் தீவிரம்..! – வனத்துறை அதிகாரி தகவல்..!
இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால், அவர்கள் மூன்று பேரும் ஆற்று வெள்ளத்தில் (River Flood) அடித்து செல்லப்பட்டனர். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் சிலர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் 3 பேரையும் மீட்டு, அருகில் உள்ள வட்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
இதில், இரண்டு இளம்பெண்களான ரிஸ்வானா மற்றும் டிமா மெப்பா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். பாதுஷா என்ற சிறுவன் மட்டும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.