Image: Women Obesity - Tamilnadu State Map file

டிசம்பர், 7: உலகளவில் மக்களை பல புதிய நோய்கள் (New Diseases) வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 10 ஆண்களுக்கு முன்பு மக்கள் அறிந்திடாத பல நோய்கள் உலகளவில் உலாவி மக்களை பெரும் இன்னலுக்கு உள்ளாக்குகிறது. மேலும், மனிதர்களுக்கு புற்றுநோய் பரவும் அபாயமும் பன்மடங்காக உயர்ந்துள்ளது.

ஒருகாலத்தில் 60 வயதுக்கு மேல் இருக்கும் நபர்களுக்கு அதிகளவில் ஏற்பட்ட மாரடைப்பு மற்றும் இதயம் சார்ந்த நோய்கள், தற்போதுள்ள நிலையில் இளம் தலைமுறையை வெகுவாக பாதிக்கிறது. இதனால் 40 வயது மற்றும் அதற்கும் கீழ் உள்ளவர்கள் சாதரணமாக மரணத்தை அடைகிறார்கள். இதற்கு முக்கிய காரணியாக உடல் பருமன் (Obesity) கூறப்படுகிறது.

உடல் எடை அதிகரிப்பு: உடல் ரீதியான உழைப்பு இல்லாமை, துரித உணவினை சாப்பிடுவது, புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க காரணிகளாக அமைகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் அதற்கு முக்கிய காரணியாக அமைகின்றன. இந்தியாவில் உடல்பருமன் தொடர்பான விஷயங்களில் தென்மாவட்டத்தில் உள்ள பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. Smart Tv: ஸ்மார்ட் டிவி வாங்க போறீங்களா?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க.! 

தமிழ்நாடு&கேரளா: தென்மாநிலத்தில் இருக்கும் 120 மாவட்டங்களில் வசித்து வரும் 15 வயது முதல் 49 வயதுக்குள் உள்ள பெண்களிடம் நடந்த ஆய்வில் ஆண்-பெண் இருபாலாரிடமும் உடல் பருமன் தொடர்பான பிரச்சனை இருப்பது அம்பலமானது. தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பெண்களிடையே உடல் பருமன் பிரச்சனை குறைவாக இருந்தாலும், தமிழ்நாடு & கேரளாவில் அது அதிகரித்துள்ளது. தேசிய அளவிலும் பெண்களின் உடல் எடை கூடியுள்ளது.

நகர்புறத்தில் பாதிப்பு: கிராமப்புறத்தில் வசித்து வரும் பெண்களை காட்டிலும், நகர்புறத்தில் இருக்கும் பெண்கள் உடல் பருமன் தொடர்பான பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இதில், கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட ஆய்வுகளை கண்டோமேயானால், தமிழ்நாட்டில் இருக்கும் பெண்களிடையே 3.3 % என்ற விகிதத்தில் உடல்பருமன் பிரச்சனை அதிகரித்துள்ளது.

உடற்பயிற்சி அவசியம்: உடல்பருமன் பிரச்சனை என்பது நமது உணவுப்பழக்கம், வாழ்வியல் முறைகள், ஹார்மோன் சுழற்சியில் ஏற்படும் பிரச்சனை மூலமாகவும் ஏற்படலாம். அதனை தவிர்க்க உடற்பயிற்சி செய்வது, அன்றாடம் நமது வேலைகளை நாமே கவனிப்பது என இருந்தால் உடல்நலம் மேம்படும். நமது உடலின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 7,2022 11:19 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).