Sunny singh (Photo Credit: @ANI X)

மே 17, சண்டிகர் (Chandigarh News): சமூக வலைதளங்களில் பஞ்சாப்- ஹரியானா மாநிலங்களின் பொது தலைநகரான சண்டிகரின் தாபா ஒன்றில் தயாரிக்கப்பட்ட பரோட்டா இப்போது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. பரோட்டாவை தயாரிக்கும் மாஸ்டர், கறுப்பு நிற ஆயில் ஒன்றை அதன் மீது ஊற்றுகிறார்.. இது என்ன எனக் கேட்டால் டீசல்.. டீசல்.. டீசல் பரோட்டா என கொஞ்சமும் தயங்காமல் சிரித்தபடி சொல்கிறார்.. இந்த வீடியோவை பார்க்கும் நமக்கு நெஞ்சு பதறுகிறது. இத்தகைய டீசல் பரோட்டா தாபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்ச்சைகள் வெடித்தன. Cannes Film Festival 2024: "அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே.." கையில் கட்டுடன் வந்து போட்டோக்கு போஸ் கொடுத்த உலக அழகி ஐஸ்வர்யா ராய்..!

இந்நிலையில் அந்தக் கடையின் ஓனர் சன்னி சிங், டீசல் பரோட்டா போன்று எதுவும் நாங்கள் செய்வதில்லை என்று விளக்கமளித்துள்ளார். `வீடியோவை எடுத்தவர் ஃபன் செய்ய வேண்டும் என்பதற்காக அப்படிச் சொல்லச் சொன்னார். பரோட்டா எண்ணெய், வெண்ணெய், நெய்யில் தான் தயாரிக்கப்படும். யாரும் டீசல் பரோட்டாவை உண்ணமாட்டார்கள் என்பதை நாங்கள் அறிவோம். எங்களது கடையில் சுகாதாரமான முறையில் செய்யப்படும் உணவுகளையே வழங்கி வருகிறோம். மக்களின் உயிருடன் நாங்கள் விளையாடவில்லை. இந்த வீடியோ இவ்வளவு வைரலாகும் என்று எதிர்பார்க்கவில்லை; அந்த வீடியோவை எடுத்தவரும் அதனைப் பதிவிலிருந்து நீக்கியுள்ளார்' என்று கூறினார்.