Canada PM Wish Navratri 2023 (Photo Credit: Twitter / Wikipedia_

அக்டோபர் 16, ஒட்டாவா (World News): புரட்டாசி மாதம் இந்துக்களுக்கு மிக முக்கிய மாதமாக கருதப்படுகிறது. இம்மாதம் விஷ்ணு மற்றும் அவரின் அவதார தெய்வங்களுக்கு உகந்த மாதமாக கருதப்படும் நிலையில், நவராத்திரி (Navratri Festival 2023) திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

உலக அளவில் உள்ள இந்து மக்களால் நடப்பு ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக கோவில்கள் நவராத்திரி கொலுக்கள் வைக்கப்பட்டு தயாராகியுள்ள. அதேபோல, சில வீடுகளிலும் நவராத்திரி திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. AFG Vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், நடப்பு சம்பியனை தோற்கடித்து அபார வெற்றியடைந்த ஆப்கானிஸ்தான்..! 

நவராத்திரி விரதம் இருந்தால் நன்மை உண்டாகும் என்பது மரபு என்பதால், இன்றளவும் மக்கள் அதனை கடைபிடித்து வருகின்றனர். 15 அக்டோபர் 2023 முதல் 24 அக்டோபர் 2023 வரை நவராத்திரி சிறப்பிக்கப்படுகிறது.

இந்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), இந்து சமூக மக்களுக்காக தனது நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "இனிய நவராத்திரி வாழ்த்துக்கள். இந்து சமூகத்தை சேர்ந்த மக்களுக்கும், இந்த விழாவை கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளார்.