DD Vs ITT Q2 Highlights (Photo Credit: @TNPremierLeague X)

ஆகஸ்ட் 03, சென்னை (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2024)தொடரின் 8-வது சீசன் கடந்த ஜூலை 5-ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடின. இதில், லைகா கோவை கிங்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் என்று 4 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு (Play-Off) தகுதி பெற்றன. முதல் தகுதி சுற்று போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி, லைகா கோவை கிங்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. அடுத்து நடந்த எலிமினேட்டர் சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் வீழ்த்தி 2-வது தகுதிச் சுற்று போட்டிக்கு முன்னேறியது. SL Vs IND 1st ODI Highlights: இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு; இலங்கை அணியில் இருவர் அரைசதம்..!

இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது தகுதிச் சுற்று போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ்-ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் (DD Vs ITT Qualifier 2)அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய திருப்பூர் அணி 19.4 ஓவர்களில் 108 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மான் பாஃப்னா 26 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் அணியில் விக்னேஷ் 4 ஓவர்கள் வீசி 8 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். சுபோத் பதி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர், 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10.5 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 112 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. விமல் குமார் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். அஸ்வின் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். ஆட்டநாயகன் விருதை 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்திய விக்னேஷ் பெற்று சென்றார். வருகின்ற 4-ஆம் தேதி (நாளை) சென்னையில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.