ஏப்ரல் 12, மொராதாபாத் (Uttar Pradesh News): இந்தியாவில் கோடைகாலம் மக்களை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, வடமாநிலங்களில் மிகப்பெரிய அளவில் வதைக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனிடையே, காற்றழுத்த சுழற்சி காரணமாக ஆங்காங்கே திடீர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மின்னல் தாக்குதல் தொடர்பான விஷயங்களும் வடமாநிலத்தில் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மின்னல் தாக்கி ஒருசில மரணங்கள், கால்நடைகள் உயிரிழப்பும் நேர்ந்துள்ளது. Shocking Video: ராட்டினத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.. திருவிழாவில் அசம்பாவிதம்.!
5 பேரை மின்னல் தாக்கியது:
இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மொராதாபாத், திட்டங்கர் மகாவீர் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர்களில் சிலர் மழை காரணமாக மரத்தடியில் ஒதுங்கி இருந்தனர். அப்போது, திடீரென மின்னல் தாக்கியத்தில் 5 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 2 பேர் கவலைக்கிடமான வகையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பதறவைக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
மின்னல் தாக்கி மாணவர்கள் சரிந்து விழும் காட்சி:
बरसात से बचने के लिए पेड़ के नीचे खड़े 5 छात्रों पर गिरी बिजली, 2 छात्रों की हालत नाजुक
मामला मुरादाबाद के तीर्थकर महावीर यूनिवर्सिटी का है
— Priya singh (@priyarajputlive) April 12, 2025