Accuse Murugesan | Child Harassment File Pic (Photo Credit: YouTube / Pixabay)

ஏப்ரல் 12, வாழப்பாடி (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி, அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுமி கடுமையான வயிற்று வலியுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு சிறுமிக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாக கூறி உடனடியாக சிகிச்சை அளித்தனர். அங்கு குழந்தைக்கு ஆண் குழந்தை பிறந்தது. Shocking Video: ராட்டினத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.. திருவிழாவில் அசம்பாவிதம்.! 

60 வயது முதியவரின் அதிர்ச்சி செயல்:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி அனைத்து மகளிர் காவல்நிலைய அதிகாரிகள், மருத்துவமனைக்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வரும் முதியவர் பழனிச்சாமி தன்னை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்,சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பழனிச்சாமி என்ற 60 வயதுடைய முதியவரை கைது செய்தனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3