ஆகஸ்ட் 07, சென்னை (Chennai News): வங்கதேசத்தில் உள்ள பர்குனா பகுதியை சேர்ந்த தம்பதி சுசில் ரஞ்சன் (வயது 73)-புரோவா ராணி (வயது 61). இதில் புரோவா ராணி புற்றுநோயால் (Cancer) பாதிக்கப்பட்டு உள்ளார். அவரது மருத்துவ சிகிச்சைக்காக, வேலுாரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனைக்கு, ஜூலை 10-ஆம் தேதி அன்று தம்பதி இருவரும் வந்துள்ளனர். Minor Girl Dies By Electric Shock: குளிர்சாதனப் பெட்டியை திறந்த 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி.. பெற்றோர் பரிதவிப்பு..!
கடந்த ஆகஸ்ட் 01-ஆம் தேதி சிகிச்சை முடிந்த பின், தங்களது நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், வங்கதேசத்தில் மோசமான நிலைமை உள்ளதால், சென்னையில் இருந்து செல்லும் 3 விமானங்கள், கடந்த இரு நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த 5ம் தேதி வங்க தேச தலைநகர் டாக்காவுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், அன்றைய தினம் விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நேற்று (ஆகஸ்ட் 06) சென்று விடலாம் என நினைத்து, விமான நிலையம் (Chennai Airport) வந்த இருவரும், ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால், இருவரும் சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு பகுதி கழிப்பறை அருகே தங்கி விட்டனர். அவர்களுக்கு விமான நிலைய அதிகாரிகள், உணவு மற்றும் குடிநீர் வழங்கி, விமான நிலையத்தில் தங்க அனுமதித்துள்ளனர். இதுகுறித்து, சென்னை விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது வங்கதேசத்திற்கு விமானங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. தம்பதியை பற்றி வங்கதேச துாதரக அதிகாரிகளிடம் தெரிவித்து, அவர்கள் நாட்டிற்கு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' எனக் கூறினார்.