ஆகஸ்ட் 07, ஆவடி (Chennai News): சென்னையில் உள்ள ஆவடி, நந்தவன மேட்டூர் நேதாஜி தெருவைச் சேர்ந்த தம்பதி கவுதம்-பிரியா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகள் ரூபாவாதி (வயது 5) தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், ரூபாவாதி நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியை (Fridge) திறந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுமி மீது மின்சாரம் (Electrical Shock) பாய்ந்துள்ளது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். TN Weather Update: காலை 10 மணிவரையில் 3 மாவட்டங்களில் இடியுடன் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இதனைப் பார்த்த அவரது தாய் பிரியா அதிர்ச்சியடைந்து, உடனடியாக மகளை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவடி காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.