Abhinav Bindra (Photo Credit: Facebook)

ஜூலை 25, புதுடெல்லி (New Delhi): உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் விளையாட்டு வீரர்களுக்கும் கொண்டாட்டமான திருவிழாவாக கருதப்படுகிறது பாரீஸ் ஒலிம்பிக் (Olympic). ஒலிம்பிக்கை பொறுத்தவரை அமெரிக்காவும், சீனாவுமே ஆதிக்கம் செலுத்தும் நாடுகளாக இருந்து வருகிறது. இந்திய அணிக்காக தனிநபர் யாருமே ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லவில்லை என்று நீண்ட ஆண்டுகளாக ஏங்கி வந்த இந்த தேசத்தின் ஏக்கத்தை நீக்கியவர் அபினவ் பிந்த்ரா (Abhinav Bindra). உத்தரகாண்டில் உள்ள டேராடூனில் பிறந்த இவர், சிறுவயது முதலே துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். இதையடுத்து, இவர் துப்பாக்கிச்சுடுதலுக்கு முறைப்படி பயிற்சி மேற்கொண்டார்.

துப்பாக்கிச் சூடு ஜாம்பவான் அபினவ் பிந்த்ரா: இந்தியாவிற்காக 2000ம் ஆண்டு ஒலிம்பிக்கில் முதன்முறையாக அறிமுகமான அபினவ் பிந்த்ரா, 2008ம் ஆண்டு சீனாவின் பீஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று, இந்தியாவிற்காக முதன்முறையாக தங்கம் வென்றவர் என்று வரலாறு படைத்தார். அப்படிப்பட்ட புகழ்பெற்ற அபினவ் பிந்த்ராவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (International Olympic committee) உயரிய விருதான ஒலிம்பிக் ஆர்டர் விருது வழங்கப்பட்டது. ஒலிம்பிக் ஆர்டர் விருது பெற்ற துப்பாக்கிச் சூடு ஜாம்பவான் அபினவ் பிந்த்ராவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். World Embryologist Day 2024: உலக ஐவிஎப் தினம்.. ஐவிஎப் என்னும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை என்றால் என்ன? விபரம் உள்ளே..!

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து: "அபினவ் பிந்த்ராவுக்கு ஒலிம்பிக் ஆர்டர் கிடைத்திருப்பது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கிறது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். விளையாட்டு வீரராக இருந்தாலும் சரி, வரவிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்தாலும் சரி, விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் இயக்கத்தில் அபினவ் பிந்த்ரா மிகப்பெரிய பங்களிப்பைச் செய்துள்ளார்" என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் கணக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.