ஜூலை 25, சென்னை (Chennai): இயற்கையாகவே கருத்தரிக்க முடியாமல், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்கும் பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பு முறைகள் வரப்பிரசாதமாக இருக்கின்றன. அந்த வகையில் ஐவிஎப் பற்றிய சரியான தகவல்களை மக்களுக்கு பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25 அன்று உலக ஐவிஎப் தினம் (World Embryologist Day) கொண்டாடப்படுகிறது.
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை: ஐவிஎப் (IVF) என்பது கருத்தரித்தல் செயல்முறையாகும். இந்த செயல்முறையில் ஐவிஎப் தொழிநுட்பத்தின் மூலம், ஆய்வகத்தில் பெண்களின் கருப்பையில் இருந்து முட்டைகள் பிரித்தெடுக்கப்பட்டு, ஆண்களின் விந்தணுக்களுடன் இணைக்கப்படுகின்றன. பின்னர் ஆய்வகத்திலேயே அதிலிருந்து கரு தயாரிக்கப்படுகிறது. இந்தக் கருவைத் தயாரித்த பிறகு, பெண்ணின் கருப்பைக்கு மாற்றுகின்றனர். இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாத தம்பதிகள் அல்லது கர்ப்பம் நிற்காத பெண்களுக்கு, ஐவிஎப் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் ஐவிஎப் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கின்றனர். Hair Fall: முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்ளும் இளம்பெண்கள்.. காரணம் என்ன?.. அதிர்ச்சி தகவல்.!
யார்க்கு ஏற்றது?: இந்த சிகிச்சையின் வெற்றி விகிதம் வெற்றி விகிதம் 35 வயதிற்குட்பட்ட பெண்களில் அதிகமாக உள்ளது. இந்த வயதிற்குப் பிறகு, பெண்களின் கருவுறுதல் குறையத் தொடங்குகிறது. மேலும் ஐவிஎப்க்கு முன், பெண்ணின் கருப்பையின் திறன் மற்றும் ஆணின் விந்தணு தரம் ஆகியவை ஆராயப்படுகின்றன. அனைத்து பரிசோதனைகளும் முடிந்த பிறகு ஐவிஎப் சிகிச்சை அளிக்கப்படுகிறது.