Fire Factory Explodes | File Pic (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 14, ஸ்ரீவில்லிபுத்தூர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் (Srivilliputhur), மாயத்தேவன்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல பணியாளர்கள் தங்களின் வேளையில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, பட்டாசு ஆலை திடீரென வெடித்து சிதறி இருக்கிறது. 2-Year-Old Child Dies: 2 வயது குழந்தை தலை சிதறி மரணம்; தாயின் அலட்சியத்தால் கண்ணெதிரே நடந்த சோகம்.!

இருவர் பலி., 2 பேரின் நிலை என்ன?

இந்த விபத்தில் பட்டாசு தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்த இரு தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், 2 பேர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படை, காவல்துறை அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். லாரியில் இருந்து ரசாயன பொருட்களை இறக்கிவைத்தபோது நடந்த சோகத்தில் புலிக்குட்டி,  கார்த்திக் ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்து இருக்கின்றனர்.  College Student Attacked: மயிலாடுதுறையில் அதிர்ச்சி சம்பவம்.. ஐடிஐ மாணவரை சுற்றிவளைத்து சரமாரி தாக்குதல்.!  

மத்திய அமைச்சர் வந்துசென்ற ஒருநாளில் சோகம்:

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பட்டாசு ஆலையின் உரிமையாளர், ஆலையின் உரிமம் குறித்து காவல் துறையினர் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். விரைவில் வெடிவிபத்துக்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலி எண்ணிக்கை உயருமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, நேற்று சிவகாசிக்கு நேரில் வந்து பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பட்டாசு தொழில் கஷ்டங்கள் குறித்து தனக்கு தெரியும் என்பதால், விரைவில் இங்கு நடக்கும் துயரங்களை குறிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசி சென்றார். இதனிடையே ஒரேநாளில் விபத்து ஏற்பட்டுள்ளது.