Earthquake (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 15, கலிபோர்னியா (World News): அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காவலரின் முதுகில் விஷஊசி செலுத்திய செவிலியர்.. சண்டையில் நடந்த பயங்கரம்.!

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:

சான் டியாகோ நகரில் இருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் இருக்கும் ஜூலியன் பகுதி, நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது. மேலும், மக்கள் குறைவாக வசிக்கும் இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், பெரியளவில் பாதிப்பு இருக்காது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் லேசான பொருட்சேதங்கள் ஏற்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கலிபோர்னியாவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.