Gold Silver Price (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 17, சென்னை (Chennai News): உலகளவில் நடைபெறும் போர்கள், அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தக முதலீடுகள், இதனால் ஏற்படும் பொருளாதார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் சவரன் விலை தற்போது ரூ.70 ஆயிரத்தை தாண்டி செல்கிறது. பங்குச்சந்தையின் தொடர் வீழ்ச்சியால் தங்கம் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. Gold Silver Price: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை இன்று (Today Gold Rate in Chennai) & வெள்ளி விலை இன்று (Silver Price in Chennai):

இந்நிலையில், ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று வெள்ளிக்கிழமை, தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இன்று (ஏப்ரல் 17) 22 கேரட் தங்கத்தின் (Gold) விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.8,920க்கு விற்கப்படுகிறது. சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி (Silver) விலையில் மாற்றமில்லாமல், வெள்ளி ஒரு கிராம் ரூ.110க்கும், வெள்ளி கிலோ ரூ.1,10,000க்கு விற்கப்படுகிறது.