College Student Attacked (Photo Credit: Facebook)

ஆகஸ்ட் 14, மயிலாடுதுறை (News): கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள படுகொலை சம்பவங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்படும் மோதல் போக்கு போன்றவை மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருசில இடங்களில் நடக்கும் படுகொலைகள் மக்களை பதறவைக்கும் வகையிலும் இருக்கிறது. கொலை சம்பவங்கள் நடைபெற்று முடிந்தபின்னர் குற்றம் இழைத்தோரின் மீது நடவடிக்கை எடுத்தாலும், குற்றங்கள் தொடருகின்றன. Boy Suffered Burn Injury: தீ மிதித்தபோது தவறி விழுந்து 7 வயது சிறுவன் தீக்காயம்..!

மாணவர் மீது தாக்குதல்:

இந்நிலையில், மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் மீது கூட்டமாக சேர்ந்து மாணவர்கள் தாக்குதல் நடத்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த வீடியோவின்படி, தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் தாக்கப்பட்டவர் மயிலாடுதுறை மெய்கண்டார் தொழிற்பயிற்சி கல்லூரியில் படிப்பவர்கள் என தெரியவருகிறது. ஆனால், தகவல் உறுதி செய்யப்படவில்லை.

விசாரணை நடத்த கோரிக்கை:

ஐடிஐ சீருடை அணிந்துள்ள மாணவர் ஒருவர், தனது தரப்பு ஆதரவு கும்பல் துணையுடன், தன்னுடன் பயின்று வரும் சக மாணவர் ஒருவரை தாக்குகிறார். பின் வீடியோ காலில் பேசும் நபரிடம் மன்னிப்பு கேள் என்று கூறியபடி, அவரை விடலாமா? என்று கேட்க, அவர் விடுங்கள் என்றதும் கன்னத்திலேயே விடுகிறார். எதற்காக இந்த மோதல் சம்பவம் நடந்தது? என்பது குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த சம்பவத்தின் வீடியோவின் பேரில் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள பதிவரும், விசாரணை முன்னெடுக்கப்படவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் எனவும் முகநூல் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

விடியோவை காண இங்கு அழுத்தவும்: