உனக்கு 18 எனக்கு 28.. மருமகனுடன் காதல் வயப்பட்ட அத்தை.., ஓட்டம் பிடித்த ஜோடி..!

உத்தர பிரதேசத்தில் 18 வயது மருமகனுடன், 28 வயது பெண் ஒருவர் கள்ளக்காதல் ஏற்பட்டு ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உனக்கு 18 எனக்கு 28.. மருமகனுடன் காதல் வயப்பட்ட அத்தை.., ஓட்டம் பிடித்த ஜோடி..!
Marriage (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 17, மீரட் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மீரட்டின் (Meerut) சரூர்பூர் பகுதியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இவருடைய 18 வயது மருமகன் கிராமத்திற்கு வந்தார். அப்போது, இவர்கள் நெருக்கமாக பேசி பழகி வந்துள்ளனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கணவரின் கழுத்தறுத்து கொலை.. பெண் யூடியூபர் - இன்ஸ்டா பிரபலம் பழக்கத்தில் மலர்ந்த காதலால் விபரீதம்.!

அத்தையுடன் ஓட்டம் பிடித்த மருமகன்:

இந்நிலையில், திடீரென இவர்கள் இருவரையும் காணவில்லை. அவரது கணவர், தனது மனைவியை பல இடங்களில் தேடினார். இறுதியாக, காவல்நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்தார். அதில், தனது சொந்த மருமகன், மனைவியிடம் பேசி பழகி அவரை கூட்டி சென்றுள்ளார். அவர்கள் இருவரையும் கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 18 வயது தனது 28 வயது அத்தையுடன் ஓடிப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 12:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).