Director SS Stanley (Photo Credit: @FilmibeatTa X)

ஏப்ரல் 15, சென்னை (Cinema News): தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான எஸ்.எஸ். ஸ்டான்லி (வயது 57), உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். இவர், நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த 'ஏப்ரல் மாதத்தில்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து, தனுஷை வைத்து, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், மெர்குரி பூக்கள், கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களையும் இயக்கினார். Actor Sri: அச்சச்சோ.. இவரா அந்த தமிழ் நடிகர்? கலங்கவைத்த ரசிகர்களின் லேட்டஸ்ட் வீடியோ.!

இயக்குநர் எஸ். எஸ். ஸ்டான்லி மரணம்:

இவர் ராவணன், ஆண்டவன் கட்டளை, சர்க்கார், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், எஸ்.எஸ். ஸ்டான்லியின் (S. S. Stanley) மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதி சடங்குகள் இன்று மாலை வளசரவாக்கம் மின்மயானத்தில் நடைபெறவுள்ளது.