Fruit (Photo Credit: Pixabay)

ஆகஸ்ட் 14, சென்னை (Health Tips): நமது உடலுக்கு தேவையான ஆற்றல்களை வழங்கும் பழங்களை சாப்பிடும் விவகாரத்தில் பலருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக காலை நேரத்தில் பழங்களை சாப்பிடும் விஷயத்தில் இவை நீடிக்கின்றன.

ஒவ்வொருவருக்கும் வளர்சிதை மாற்ற விஷயத்தில் மாறுபாடு என்பது நிலவும். உடலின் வகையை பொறுத்து இவை மாறுபடும். இதற்கேற்ப பழங்களை நாம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பழங்களில் நொதிகள், அமிலம் இருக்கின்றன.

இவை குடலில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் இணைந்து வினைபுரியும். இதன் செயல்பாடுகளை பொறுத்தே நமக்கு நன்மை, தீமை அமைகின்றன. பழங்களில் காலை நேரங்களில் அமிலம் நிறைந்த அல்லது செரிமானத்தை ஏற்படுத்தக்கூடிய பழங்களை வெறும் வயிறில் சாப்பிடுவது நல்லதல்ல என்பதும் கவனிக்கத்தக்கது. Sachin Tendulkar: இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சச்சின் 90-களில் இன்றைய நாளில் செய்த அசத்தல் சாதனை.!

நெஞ்சு எரிச்சல், இருமல், சளி, ஒவ்வாமை, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அலர்ஜி, நீரிழிவு நோய், உடற்பருமன் போன்ற அறிகுறிகளை கொண்டோர் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட கூடாது. மலச்சிக்கல், உலர்ந்த சருமம், வறண்ட கூந்தல், வளர்சிதை மாற்ற பிரச்சனை உடையவர்கள் பழங்களை காலை நேரத்தில் சாப்பிடலாம். பழங்களை சாப்பிடுவோர் தனித்தனியே சாப்பிடுவது நல்லது.

காய்கறிகள், பால் சார்ந்த பொருட்கள் மற்றும் தானிய வகைகளோடு சேர்த்து சாப்பிட கூடாது. இறைச்சி வகைகளோடு பழங்களை சேர்க்க கூடாது. உலர் பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவது பிரச்சனை இல்லை. காலை நேரத்தில் பழங்களை சாப்பிடுவது காலை 7 மணிமுதல் 11 மணிக்குள் உடலில் நச்சு நீக்கும் செயல்முறைகள் ஆற்றலை வழங்கும். பிற உணவுப்பொருட்களோடு ஒப்பிடும்போது, பழங்கள் எளிதில் ஜீரணமாகும்.

நாம் எழுந்ததும் உடலுக்கு இயற்கையாக சர்க்கரை தேவைப்படும் என்பதால், பழங்களில் உள்ள சர்க்கரை மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்க உதவும்.