
மார்ச் 11, ராஜ்கோட் (Gujarat News): குஜராத் மாநிலம், ராஜ்கோட் (Rajkot) மாவட்டத்தில் உள்ள ஜஸ்தான் நகரை சேர்ந்தவர் பிரதாப் (வயது 52). இவர், தனது மனைவி ஜெயா, தந்தை ராம் போரிச்சா (வயது 76) ஆகியோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், தந்தை ராம் போரிச்சா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதற்கு, மகன் பிரதாப் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. MP Kanimozhi: அவதூறாக பேசிய மத்திய கல்வி அமைச்சர்.. திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்..!
மகன் கொலை:
இந்நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 09) ஜெயாவும், அவரது கணவரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, அவர்களின் மகன் ஜெய் தீப், பால் வாங்க வெளியே சென்றுள்ளார். மேலும் பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது மாமனாருக்கு டீ போட சென்றார். அறைகளை இணைக்கும் பொதுவான பாதையைக் கொண்ட வீட்டிற்குத் திரும்பியபோது, துப்பாக்கிச் சத்தமும் அவரது கணவர் அலறலும் கேட்டுள்ளது. உடனே, வீட்டின் ஹாலுக்கு விரைந்தார். ஆனால், கதவு பூட்டப்பட்டிருந்தது. இரண்டாவது முறை துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டதும், கதவைத் தட்டினார். போரிச்சா கதவைத் திறந்து, துப்பாக்கியைக் காட்டி துரத்தத் தொடங்கினார். இதனால் பயந்துபோன அவர் அங்கிருந்து தப்பியோடினார்.
தந்தை கைது:
சில நிமிடங்கள் கழித்து, வீட்டின் முற்றத்தில் தனது தந்தை இரத்த வெள்ளத்தில் கிடப்பதை மகன் ஜெய்தீப் கண்டார். அதே நேரத்தில் அவரது தாத்தா அவருக்கு அருகில் ஒரு மேஜையில் அமர்ந்திருந்தார். இதனையடுத்து, ஜஸ்தானில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த விசாரணையில். தனது மறுமணத்தை எதிர்த்ததற்காக தனது மாமனார் பலமுறை கொலை (Murder) மிரட்டல் விடுத்ததாக பிரதாப்பின் மனைவி ஜெயா கூறினார். இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட ராம் போரிச்சாவை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.