MI Vs GG | WPL 2025 Eliminator (Photo Credit: @WPLT20 X)

மார்ச் 12, மும்பை (Sports News): டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 (Women's Premier League 2025) போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேபிட்டல்ஸ், யுபி வாரியர்ஸ் என 5 பெண்கள் கிரிக்கெட் அணிகள் மோதிக்கொண்ட ஆட்டத்தில், தான் எதிர்கொண்ட 8 போட்டிகளில் 5ல் வெற்றியடைந்த டெல்லி கேபிட்டல்ஸ் (Delhi Capitals Women's WPL 2025) அணி, 10 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் தொடர்ந்ததால் நேரடியாக இறுதி போட்டிக்கு (Women's Premier League Final 2025) தகுதி பெற்றுள்ளது. IPL 2025: இன்னும் 10 நாட்கள் தான்.. ஐபிஎல் 2025 போட்டிக்கான கவுண்டவுன் தொடக்கம்.. போட்டி அட்டவணை, தேதி, நேரம் விபரங்கள் இதோ.! 

மும்பை - குஜராத் அணிகள் மோதல்:

புள்ளிப்பட்டியலின்படி 2 மற்றும் 3 வது இடத்தினை தக்க வைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் - குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிகளில், இரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் எலிமினேட்டர் (WPL 2025 Eliminator Round) ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்ளும். அந்த வகையில், எலிமினேட்டர் ஆட்டம் மும்பை - குஜராத் அணிகள் இடையே, 13 மார்ச் 2025 அன்று, இரவு 07:30 மணிக்கு, மும்பையில் உள்ள பர்போர்னே கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் மோதிக்கொள்ளும் அணிகளில், வெற்றி பெறுபவர் டெல்லியுடன் இறுதி போட்டியில் மோதும். இறுதிப்போட்டி (WPL 2025 Final) 15 மார்ச் 2025 அன்று நடைபெறுகிறது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி நேரடியாக பைனலுக்கு தேர்வு:

டெல்லி அணியுடன் மோதப்போவது யார்?