
மார்ச் 11, தூத்துக்குடி (Thoothukudi News): ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பச்சிளம் குழந்தைகள், கண்ணும் கருத்துமாக கவனிக்கப்பட வேண்டியவர்கள். சிறு குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு கொண்டு இருப்பார்கள். ஒவ்வொரு புதிய விஷயத்தையும் கவனிக்க வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், ஆவல், சிறுவயதில் அதிகம் இருக்கும். வீட்டுக்குள் இருக்கும் அறைகளை கால்களில் நடக்கும் முன்னர் சுற்றி பார்த்து, பின் வெளியே செல்லும் வாகனங்கள், அதிகம் தேங்கி இருக்கும் நீர் தொடர்பான விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். ஆதலால், குழந்தைகளை எப்போதும் கவனமாக பார்ப்பது அவசியமான ஒன்றாகும். Teacher's Dismissed: பாலியல் புகாரில் சிக்கிய 23 ஆசிரியர்கள் பணிநீக்கம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.! போக்ஸோவில் சிக்குவோருக்கு ஆப்படித்து அதிரடி.!
குழந்தையை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு:
இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள வீதி ஒன்றில், வீட்டின் அருகே நீர் தேங்கி இருந்தது. கடந்த பருவமழை காலத்தில் தேங்கிய நீர், இடம் தாழ்வாக இருந்த காரணத்தால், அப்படியே இருந்தது. இன்று நீர் தேங்கிய பகுதிக்கு அருகே உள்ள வீட்டில், குழந்தை ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்கிருந்து நீரை பார்க்க ஆவலுடன் வருகை தந்த நிலையில், தவறி நீருக்குள் விழுந்தார். சிறுமி நீருக்குள் விழுந்து தத்தளிப்பதை, இளைஞர் ஒருவர் எதற்ச்சையாக கண்டார். உடனடியாக சிறுமியை வந்து இளைஞர் காப்பாற்றியதால் அவர் உயிர்தப்பினார். கடந்த மார்ச் 07, 2025 அன்று, மாலை சுமார் 04:45 மணியளவில் இவ்விசயம் நடந்தது. இதன் காட்சிகள் வெளியாகி, இளைஞருக்கு பாராட்டுகளை குவித்துள்ளது.
கடந்த மழையின் போது தேங்கிய மழை நீர்:
#JUSTIN தூத்துக்குடி: தேங்கிய நீரில் விழுந்து தத்தளித்த குழந்தை மீட்பு#Thoothukudi #Child #News18Tamilnadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/WfcfgAz5Aj
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 11, 2025