
மார்ச் 13, வாஷிங்டன் (World News): இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா (NASA) விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (Astronaut Sunita Williams) மற்றும் புட்ச் வில்மோர் (Astronaut Butch Wilmore) ஆகிய இருவரும் விண்வெளி ஆராய்ச்சிக்காக, கடந்த 2024ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர். போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் இருவரும் 8 நாள் பயணமாக விண்வெளி மையத்துக்கு சென்ற நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கிக் கொண்டனர். தற்போது, 9 மாதங்களை எட்டியுள்ள நிலையில், அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. Ukraine-Russia War: 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம்.. ஓகே சொன்ன உக்ரைன்.., அதிபர் டிரம்ப் அதிரடி..!
மீண்டும் சிக்கல்:
சில தினங்களுக்கு முன், சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 16ஆம் தேதி பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்திருந்தது. இந்நிலையில், இருவரும் பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களை அழைத்து வர புளோரிடாவில் டிராகன் விண்கலத்துடன் சீறி பாய தயாராக இருந்த பால்கன் 9 ராக்கெட்டில், கடைசி நிமிடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.18 மணிக்கு டிராகன் விண்கலத்தை ஏவ இருந்த நிலையில், கடைசி நிமிடம் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து நாசா கூறுகையில், சுனிதாவை அழைத்து வரும் க்ரூ-10 மிஷன் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம். சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர மீண்டும் ராக்கெட் ஏவக் கூடிய தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என நாசா விளக்கமளித்துள்ளது.