
மார்ச் 12, சென்னை (Festival News): இந்தியாவின் மிக மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று ஹோலி பண்டிகை (Holi Festival 2025) ஆகும். இது வண்ணமயமான திருவிழாக்களில் ஒன்றாகும். வட இந்திய மக்கள் பனிக்காலம் முடிந்து கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக வண்ணங்கள் தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். வட இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த ஹோலி பண்டிகை அன்று ஒருவர் மீது ஒருவர் கலர் பொடிகளை தூவி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். மேலும், ஹோலி பண்டிகை தினத்தன்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கான நாளாக மட்டுமின்றி புதிய மாற்றங்களை, வளர்ச்சியை தருவதற்கான நாளாகவும் உள்ளதால் இந்த நாளில் செய்யப்படும் பூஜைகள், வழிபாடுகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி 2025; மகாசிவராத்திரியன்று செய்யப்படும் சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள்.!
ஹோலி நாள்:
2025ஆம் ஆண்டு மார்ச் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஹோலிகா தகனம்:
இந்த ஆண்டு ஹோலி பண்டிகைக்கு முதல் நாளான மார்ச் 13ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி ஹோலிகா தகனம் (Holika Dahan) ஆகும். இது ஹோலி பண்டிகையின் முந்தன நாள் இரவு 8 மணிக்கு மேல் வீட்டு வாசலில் மரக்கட்டைகளை வைத்து, எரியூட்டி அக்கினி தேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து மக்கள் பூஜை செய்யும் ஒரு விழாவாகும். இந்த விழாவில் பல வகையான இனிப்பு பண்டங்களும் அக்னி தேவனுக்கு தாம்பூலத்தில் வைத்து படைக்கப்படுகிறது.
ஹோலி பண்டிகை:
பக்த பிரகலாதன் உயிர்பெற்று எழுந்ததையும் மற்றும் ஹோலிகா தகனம் ஆனதை ஒட்டியும், வட இந்திய மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக 'ஹோலி ஹோலி' என்று உற்சாகமாக குரல் எழுப்புவார்கள். இதனையடுத்து, தேங்காயுடன் பூஜை செய்து வைத்த இனிப்புகளையும் அக்னியில் போட்டு விடுவார்கள். ஹோலி பண்டிகை அன்று மக்கள் ஒருவருக்கொருவர் கலர் பொடிகளில் தூவி வாழ்த்துக்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இந்த கலர் பொடி காற்றில் உயரப் பரந்து தேவர்களை மகிழ்விப்பதாக புராணங்களில் கூறப்படுகிறது.