
மார்ச் 11, சின்ன காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட, பொய்யாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. உள்ளூரில் ரௌடியாக வலம் வரும் ராஜாவுக்கு, வசூல் ராஜா என்ற அடைமொழிப்பெயரும் உண்டு என கூறப்படுகிறது. இன்று ராஜா திருக்காலிமேடு பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே நின்றுகொண்டு இருந்தார். அப்போது, வந்து வந்த கும்பல் ஒன்று, ராஜா மீது வெடிகுண்டு வீசியது. Cigarette Kills: படுக்கையிலேயே மூச்சுத்திணறி உயிரிழந்த ஐடி ஊழியர்.. எமனான சிகிரெட் உயிர்பறித்த சோகம்..!
வெடிகுண்டு வீசி கொலை:
தன் மீது எதிராளிகள் தாக்குதல் நடத்த வந்துள்ளார்கள் என சுதாரிப்பதற்குள், ராஜாவை சுற்றிவளைத்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்து தப்பிச் சென்றது. இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். Karur Shocker: பட்டப்பகலில் கல்லூரி மாணவி.. கரூரில் அதிர்ச்சி.. பதற்றத்தில் பெற்றோர்.!
காவல்துறை தீவிர விசாரணை:
ராஜாவை கொலை செய்தது யார்? என தனிப்படை அமைத்து விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகளை கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். முதற்கட்ட தகவலில், ராஜா மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, ஆட்கடத்தல் என 20 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. அவ்வப்போது குண்டர் சட்டத்திலும் ரவுடி வசூல் ராஜா கொலை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.