
மார்ச் 10, சென்னை (Technology News): கோடை காலம் வந்துவிட்டது இனி அனைத்து கடைகளிலும் ஆஃப்பர்களில் ஏசி, ஏர் கூலர்கள் விற்பனையும் ஆரம்பித்துவிடும். தற்போது பட்ஜெட்டுக்குள் ஏர் குலர்களை வாங்குவேரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இருப்பினும் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப சரியான கூலாரை தேர்வு செய்வதில் குழப்பம் நிழவி தான் வருகிறது.
கூலரின் வகையை தேர்வு செய்ய வேண்டும்
கூலர்கள் வெகு நாட்கள் நீடிக்கவும், கூலிங் தருவதற்கும் முதலில் அந்த கூலரின் வகையும், அதை வைக்க போகும் இடத்தையும் பொருத்து தான் உள்ளது. அதிக கூலிங் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறிய அரையில் பெரிய அளவிலான கூலர்கலை வாங்கி வைத்தால் அது விரைவிலேயே சூடாகி பழுதடைய வாய்ப்புள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அறையாக இருந்தால் பெர்ஸனல் கூலர்களை தேர்வு செய்ய வேண்டும். அதாவது 150 சதுர அடி முதல் 300 சதுர அடி வரை உள்ள உட்புற பயன்பாடுகளுக்கு மற்றும் பெட்ரூம் மாதிரியான அறைகளுக்கு இந்த வகை கூலர்கள் சிறந்த தேர்வுவாக இருக்கும்.
ஹால் அல்லது ஓபன் ஸ்பேஷ், பால்கனி, மாடி போன்ற இடங்களில் வைக்க, 300 சதுர அடிகளுக்கு மேல் இருக்கும் பெரிய அறைகளுக்கு டெசர்ட் கூலர்களை வைப்பது சிறந்தது. Ecohouse: இயற்கைக்கு ஏற்ப வீடு இருக்கட்டும்.. மறுசுழற்சி வீடுகள்..!
தண்ணீர் தொட்டி
ஏர்கூலர்கள் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று அதன் தண்ணீர் தொட்டியின் கொள்ளளவு திறன். எந்த அளவு திறனுள்ள பெரிய கூலர்களின் வாங்குகிறோமோ அதற்கு ஏற்ப அதன் தண்ணீர் தொட்டியின் திறனும் இருக்க வேண்டும். அதிக கூலிங்கிற்கு அறை அளவை விட அதிக திறன் கொண்ட ஏர் கூலராக தேர்வு செய்ய வேண்டும்.
150 சதுர அடியைக் கொண்ட அரையாக இருப்பின் பெர்சனல் கூலரின் 15 லிட்டர் திறன் கொண்ட கூலர்களை தேர்வு செய்ய வேண்டும். நடுத்தரமான 300 சதுர அடி கொண்ட இடங்களுக்கு 25 லிட்டர் கெபாஸிட்டி கொண்ட கூலர்கள் சிறந்தது. 600 சதுர் அடிக்கு மேலுள்ள அறைகளுக்கு பெரிய அறைகளுக்கு 40 லிட்டர் முதல் 55 லிட்டருக்கு மேலுள்ள டெசர்ட் கூலர்கள் சரியான தேர்வாக இருக்கும்.
காலநிலை மற்றும் இரைச்சல்
சராசரியாக 30 முதல் 40 டிகிரி டெம்பரேச்சர் இருக்கும் ஈரப்பதமான காலங்களில் பெர்ஸ்னர் கூலர்களை பொருத்தமானதாக இருக்கும். அதிக ஈரப்பதமுள்ள இடங்களில் கூலர்ஸை தவிர்த்துவிடலாம். வறண்ட காலநிலைகளில் டெசர்ட் கூலர்கள் பயன்படுத்த வேண்டும். இதில் பெரிய அளவில் கூலிங்கை வெளிப்படுத்துவதற்காக ஃபேன் மாடலில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிக இரைச்சலை ஏற்படுத்தாததா என உறுதிபடுத்திக் கொண்டு வாங்க வேண்டும்.
CMH
ஏர் கூலர்களில் முக்கியமாக கவனிக்க வேண்டியது Cubic meters per hour. அதவாது கூலர்கள் காற்றை எந்த அளவில் டெலிவரி செய்கிறது என்பது. இதைப் பொருத்து தான் சிறந்த ஏர்கூலர்கள் தேர்வு செய்யமுடியும். இதை கணக்கிட அறையின் உயரம், அகலம், நீலம் ஆகியவற்றை மீட்டரில் எடுத்து பெருக்கி கொள்ள வேண்டும். கிடைத்த மீட்டர் க்யூபை, ஏர் எக்ஸ்சேஞ்சை டைம் (20) உடன் பெருக்க வேண்டும். ஏர் எக்ஸ்சேஞ்சை டைம் என்பது கூலரில் நிமிடத்திற்கு 20 முதல் 30 என்ற வீதத்தில் அறைக்கு காற்றை அனுப்பும் திறன். குறைந்தது சிபிஎம் 3000 இருக்கும் விதத்தில் வாங்கினால் நடுத்தர அறைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
அதிக தொகைக்கு ஏர்கூலர்களை வாங்க நினைப்பவர்கள், சரியான கூலரைத் தேர்வு செய்யுங்கள். மேலும் இதில் பல புதிய ஃபீச்சர்களைக் கொண்டும் வருகிறது அதையும் விசாரித்து வாங்க வேண்டும். சில கூலர்களில் விரைவில் குளிரூட்டுவதற்கு ஐஸ்கட்டிகள் போடும் விதத்தில் ஐஸ்சேம்பர்கள் வசதியுடனும் வருகிறது. மேலும் இன்வெர்ட்டர்களில் இயங்கும் விதங்களிலும், ரிமோட் கண்ட்ரோல், ஆன்டிகண்ட்ரோல், டஸ்ட் பில்டர்கள் போன்ற பல அம்சங்களுடனும் இருக்கின்றன.
ஏர்கூலர்கள் விற்பனையில் க்ராம்ப்டன், பஜாஜ், சிம்ஃபனி, வோல்டாஸ், ஹவல்ஸ், போன்ற பல பிராண்டுகள் முன்னனியில் உள்ளன. ஏர்கூலர்கள் குறைந்தது 8 ஆயிரத்திலிருந்து வாங்கினால் நீண்ட நாட்களுக்கும் நீடித்து நிலைக்கும். 5 ஆயிரத்திற்கும் குறைவாக ஏர்கூலர்கள் விற்படுகின்றன. ஆனால் இவைகள் நீடித்து உழைக்கும் என்று கூற முடியாது. எதுவாயினும் தங்களின் நிதிநிலையையும், தேவையையும் பொருத்து இவற்றை தேர்வு செய்து வாங்க வேண்டும் என்பது நினைவிருக்கட்டும்.
தீமையும் உண்டு:
வெளியில் உள்ள வெப்பக்காற்றை இழுத்து குளிர்ந்த காற்றாக மாற்றி வெளியில் அனுப்புகிறது இது ஒரு சிலருக்கும் ஒத்துக்கொள்ளாது. ரூம் முழுவதையும் ஏசி போல மூடிவிட்டிப் பயன்படுத்தக்கூடாது. இது ரூமில் ஈரப்பதத்தை அதிகரித்துவிடும். இதனால் பூஞ்சை தொற்று ஏற்பட்டு தோல் அலர்சியை ஏற்படுத்தும். மூச்சுத்திணறல், சளித்தொல்லையும் ஏற்பட வாய்ப்புள்ளது.