
மார்ச் 12, பலியா (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், பலியா (Ballia) மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரோஷன் தாக்குர். இவர், சமீபத்தில் புதிய கார் ஒன்றை வாங்கினார். அதற்கு பூஜை போடுவதற்காக தன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு, பக்கத்து ஊரில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார். குடும்பத்தினர் அனைவரும் பூஜையில் பங்கேற்றனர். ரோஷனின் ஒன்றரை வயது குழந்தை ரேயான்ஷ், காரின் உள்ளே அமர்ந்து கொண்டு, கதவு வழியாக தலையை வெளியே நீட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. Kerala Girl Dies: யூடியூப் வீடியோ பார்த்து டயட் இருந்த இளம்பெண்.. 24 கிலோ எடையுடன் உயிரிழந்த சோகம்..!
குழந்தை பரிதாப பலி:
அப்போது காருக்கு திரும்பிய குழந்தையின் தந்தை, இன்ஜினை இயக்கிய போது, திறந்திருந்த கார் கதவின் கண்ணாடி தானாக மேலே உயர்ந்தது. இதில் குழந்தை ரேயான்ஷின் கழுத்து சிக்கி, உடனே மயக்க நிலைக்கு சென்றது. உடனே குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.