
மார்ச் 13, சென்னை (Health Tips): நம் வீட்டில் எப்போதும் எலுமிச்சை பழம் இருப்பது நல்லது. உணவுப் பொருட்களின் சுவையை அதிகரிக்க எலுமிச்சை சாறு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கோடைகாலத்தில் எலுமிச்சை பல பானங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. எலுமிச்சை சுவையை அதிகரிப்பதில் உதவுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் நல்லது. நாம் தினமும் பல வழிகளில் எலுமிச்சையை உட்கொள்ளலாம். எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்கலாம், எலுமிச்சை சாற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். எலுமிச்சையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் அதிகமாக உள்ளன. இதன் மூலம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். Diabetes Diet Tips: சுகர் லெவலை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமா? உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டியவை..!
தினமும் எலுமிச்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்கள் நம்மை தாக்காமல் பார்த்துக்கொள்ளலாம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
செரிமானம் மேம்படும்:
செரிமானத்தை மேம்படுத்த, காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு பிழிந்து குடிக்க வேண்டும். எலுமிச்சை குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியாக இருக்கும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
உயர் இரத்த அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளிக்கும்:
அன்றாட உணவில் எலுமிச்சையைச் சேர்ப்பது இரத்த அழுத்தப் பிரச்சனைகளைப் போக்க உதவும். உயர் இரத்த அழுத்தம் இருந்தால், எலுமிச்சை சாறு கலந்த தண்ணீர் குடிக்க வேண்டும். எலுமிச்சையில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
புத்துணர்ச்சி அளிக்கும்:
எலுமிச்சை சாறு குடிப்பதால் அன்றைய நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும்:
சிட்ரஸ் பழங்களில் உள்ள ஃபிளாவனாய்டுகள் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. தினமும் எலுமிச்சை அல்லது சிட்ரஸ் பழங்களை உட்கொள்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து 19 சதவீதம் குறைவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
சரும ஆரோக்கியம் மேம்படும்:
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. வைட்டமின் சி சருமத்திற்கு மிகவும் முக்கியமானது. இது சருமத்தை பாதுகாக்கிறது. மேலும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
உடல் எடை இழப்பு:
தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறுடன், தண்ணீர் கலந்து குடிப்பதால் உடல் எடை வேகமாக குறையும்.
குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.