
மார்ச் 11, கோவிலம்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள கோவிலம்பாக்கம், காந்தி நகர், 15 வது தெரு பகுதியில் வசித்து வரும் குடும்பத்தினர் முனுசாமி, சாந்தி, ஹரிஹரன், ரவி, அஜித் குமார். இவர்கள் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள். கடந்த மார்ச் 04ம் தேதி இரவில் குடும்பத்தினர் உறங்கிக்கொண்டு இருந்தனர். வீட்டின் சமையல் அறையில் இருந்த கியாஸ் கசிந்து இருந்தது. அதனை கவனிக்காமல் குடும்பத்தினர் உறங்கியுள்ளனர். இதனால் வீடு முழுவதும் கேஸ் கசிவு ஏற்பட்டு இருந்தது. மறுநாள் அதிகாலை சுமார் 5 மணியளவில், ரவி எழுந்து வீட்டுக்கு வெளியே செல்லும்போது, மின்சார ஸ்விட்சை அழுத்தி இருக்கிறார். அப்போது, வீடு முழுவதும் நிரம்பி வெளியேறாமல் இருந்த கேஸ் தீப்பிடித்து எரிந்தது. ரவி மட்டும் வீட்டுக்கு வெளியே இருந்ததால் காயம் இன்றி தப்பினார். எஞ்சியோர் அனைவரும் படுகாயம் அடைந்தனர். பாலியல் புகாரில் சிக்கிய 23 ஆசிரியர்கள் பணிநீக்கம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.! போக்ஸோவில் சிக்குவோருக்கு ஆப்படித்து அதிரடி.!
3 பேர் பலி, ஒருவர் படுகாயம்:
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், இன்று முனுசாமி, சாந்தி, ஹரிஹரன் ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அஜித் குமார் காயத்துடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கேஸ், ரெகுலேட்டர் போன்றவற்றில் இருந்து கியாஸ் லேசாக கசிவது போல தோன்றினாலும், அதன் பழுதுகளை சரி செய்து இயக்க வேண்டும். அலட்சியத்துடன் செயல்பட்டால் எந்த மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது.