
மார்ச் 12, திருவனந்தபுரம் (Kerala News): பெண்களின் சபரிமலை என போற்றப்படும் ஆற்றுக்கால் பகவதி திருக்கோவில் (Goddess Attukal Bhagavathy Temple Festival), கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாதசாமி கோவில் அருகிலேயே அமைந்துள்ள ஆற்றுக்கால் பகவதி கோவில், புகழ்பெற்ற பகவதி கோவில்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆற்றுக்கால் பகவதி கோவிலில், பல இலட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு 10 நாட்கள் திருவிழாவை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவார்கள். கோவில் திருவிழாவின் 09 வது நாள், கோடிக்கணக்கான மக்கள் குவிந்துவிடுவார்கள். பகவதி கோவிலில் சிறப்பிக்கப்படும் 10 நாட்கள் திருவிழாவில் அரிசி, வெள்ளம், தேங்காய் கொண்டு செய்யப்படும் பொங்கல் பிரசாதமாக வழங்கப்படும்.
2025 ஆற்றுக்கால் பகவதி கோவில் திருவிழா, நல்ல நேரம் எப்போது? (Attukal Bhagavathy Temple Date Good Time)
2025ம் ஆண்டுக்கான ஆற்றுக்கால் பகவதி கோவில் திருவிழா, மார்ச் 13, 2025 வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. பெண்கள் திரளாக வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி பூஜையை சிறப்பிப்பர். மார்ச் 13, 2025 அன்று திரிபஞ்சாங்கத்தின் படி, பூரம் நட்சத்திரத்தில் காலை 06:35 மணிக்கு பண்டிகை தொடங்கி, மார்ச் 14, 2025 அன்று காலை 08:49 மணிக்கு நிறைவு பெறுகிறது. மலையாள மகரம் மாதத்தில் தொடங்கி, கார்த்திகை நட்சத்திரத்தில் நடைபெறும் ஆற்றுங்கால் பகவதி கோவில் திருவிழா, இரவு படையலுடன் நிறைவுபெறுகிறது. கோவில் பூசாரியின் அறிவிப்புக்குப்பின் பெண்கள் பாரம்பரிய மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவார்கள். பௌர்ணமி நாளில் ஆற்றுங்கால் பகவதி கோவில் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்னை பார்வதியின் அவதாரமான பகவதி பத்ரகாளியை கௌரவிக்க, இத்திருவிழா வழிவழியாக கொண்டாடப்படுகிறது. Sunita Williams Return to Earth: 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்.. தேதி குறித்த முழு விவரம் இதோ..!
ஆற்றுக்கால் பகவதி வரலாறு:
கேரளா மாநிலம் உருவாக காரணமாக இருந்ததாக புராணங்களில் கூறப்படுபவர் பரசுராமர். இவர் 108 சிவாலயங்கள், 108 பகவதி அம்மன் கோவில்களை நிறுவி இருக்கிறார். கேரளாவை பொறுத்தவரையில் அம்மனுக்கு என தனிப்பெயர் கிடையாது. அவர்களை பகவதி என்றே ஊர் பெயரை சேர்த்து அழைப்பர். தமிழ் இலக்கியங்களில் இளங்கோவடிகள் தந்த சிலப்பதிகாரத்தில், அவரின் காலத்தில் கோவில் கட்டப்பட்டதாக தகவல்கள் கூறுகிண்ரடன. சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகியையே ஆற்றுக்கால் பகவதி அம்மனின் அவதாரமாக மக்கள் வழிபடுவதாகவும், மதுரையை தீக்கு இரையாக்கிய கண்ணகி, தேனி பகுதிக்குச் சென்று, பின் அங்கிருந்து குமரி வழியே இன்றைய கேரளா மாநிலத்தில் உள்ள கொடுங்கலூர், ஆற்றுக்கால் பகுதியில் இளைப்பாறி இருந்தார். இந்த இடமே இன்றளவில் ஆற்றுக்கால் பகவதி என பின்னாளில் உருவாகியதாக கூறப்படுகிறது.
கோயிலின் சிறப்பம்சம் மற்றும் பலன்கள்:
அதேபோல, பராசக்தியின் பக்தரான ஒருவர் கிள்ளி ஆற்றில் நீராடியபோது, அன்னை பராசக்தி சிறுமி வடிவில் வந்து இருக்கிறார். அந்த குழந்தையை பராசக்தி என உறுதி செய்தவர், தனது வீட்டுக்கு அழைத்துச்செல்ல முடிவெடுத்தார். பின் தேவி மறைந்து, அதே உருவில் பக்தரின் கனவில் தோன்றி இருக்கிறார். மேலும், தென்னைமரத்தில், அடர்ந்த பகுதியில் 3 கோடு தென்படும் இடத்தல் கோவில் அமைத்து குடியேற்றுங்கள் என அன்னை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சிறிய கோவில் கட்டப்பட்டு இருக்கிறது. பின்னாளில் இக்கோவில் மக்களால் கௌரவிக்கப்பட்டு, இன்று மிகப்பெரிய பாரம்பரியத்தில் ஒன்றாக இருக்கிறது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் செம்பு தகடு கொண்டு வேயப்பட்டது ஆகும். இக்கோவில் தூண்களில் மகிஷாசுரமர்த்தினி, அன்னை காளி, ராஜராஜேஸ்வரி, சிவன் பார்வதி ஆகியோரின் சித்திரங்கள் இடம்பெற்று இருக்கின்றன. கோபுரத்தில் கண்ணகியின் வரலாற்று சிற்பமும் இருக்கிறது. கருவறையில் விநாயகர், சிவன், நாகர், தட்க்ஷிணாமூர்த்தி, ஆஞ்சநேயர் சன்னதிகள் இருக்கின்றன. இக்கோவிலுக்கு சென்று வர அம்மை நோய், கண் திருஷ்டி பிரச்சனை சரியாகும், மனஅமைதி கிடைக்கும், எதிரி தொல்லை குறையும், வழக்கில் சிக்கியிருப்போரின் நிலைமை மாறும் என்பது ஐதீகம்.
ஆற்றுக்கால் பகவதியின் அருள் கிடைக்க லேட்டஸ்ட்லி தமிழ் வாழ்த்துகிறது. இத்துடன் சில வாழ்த்துச் செய்திகளையும் இணைகிறது. அதனை நீங்கள் உங்களின் வாட்சப் ஸ்டேட்ஸில் வைத்தும் வாழ்த்துக்களை பகிரலாம்.

- ஆற்றுக்கால் பகவதியின் அருள் கிடைக்க வாழ்த்துவோம்!
- அன்னை பகவதியின் அருள் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிக்கட்டும்!
- கண்திருஷ்டி நீங்க, வாழ்வில் செல்வம் கிடைக்க ஆற்றுக்கால் பகவதியை வணங்குவோம்!
- உலகத்தாரின் அமைதிக்கும், உலகின் எதிர்காலம் சிறக்கவும் அன்னையே ஆற்றுக்கால் பகவதி அருள்புரிவாயாக!
- உன்னை நம்பி வந்தோரை வாழவைக்கும் அன்னையே! என்னையும் உன் அன்பிலனாக மாற்றுவாயாக!
- அனைவருக்கும் இனிய ஆற்றுக்கால் பகவதி திருவிழா நல்வாழ்த்துகள்!