தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக பணியாற்றி வருபவர் டி. இமான் (D. Imman). கடந்த 2002ம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் தனது இசைப்பயணத்தை தொடங்கிய இமான், தமிழ் திரையுலகில் தேசிய அளவிலான விருதுகளை வென்ற 5 வது தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இம்மானுவேல் வசந்த் தினகரன் என்ற இயற்பெயரை கொண்ட இமான், இன்று மிகப்பெரிய தமிழ்த் திரை நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார். மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், காப்பான் உட்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இளையராஜா போல இமானின் இசையால் வெற்றிகண்ட திரைப்படங்கள் ஏராளம் எனவும் கூறலாம். Ranya Rao Arrested: ரூ.12 கோடி மதிப்புள்ள நகைகளை கடத்தி வசமாக சிக்கிக்கொண்ட தமிழ் பட நடிகை.. பெங்களூரில் கைது.!

இமான் வேண்டுகோள்:

குறிப்பாக தமிழ் திரையுலகில் இமான் - சிவகார்த்திகேயன் காமினேஷன் மக்களால் பெருமளவு கொண்டாடப்பட்டது. 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வரை இமான் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும், 50 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியும் இருக்கிறார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஈமானின் எக்ஸ் (ட்விட்டர்) வலைப்பக்கம், மர்ம ஆசாமிகளால் ஹேக்கிங் செய்யப்பட்டுள்ளது. இதனால் மர்ம ஆசாமிகள் பதிவிடும் எந்த செயலையும், பதிவையும் நம்ப வேண்டாம். எனது வலைப்பக்கத்தை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் மற்றும் என்மீது அன்புள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என இமான் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இமான் தனது எக்ஸ் வலைப்பக்கம் முடக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்:

 

View this post on Instagram

 

A post shared by D.Imman (@immancomposer)