
மார்ச் 11, கண்ணூர் (Kerala News): கேரள மாநிலம், கண்ணுார் (Kannur) மாவட்டத்தில் உள்ள கூத்து பரம்பா என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஸ்ரீநந்தா (வயது 18). இவர், 'அனோரெக்ஸியா' (Anorexia) என்ற உணவுக் கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். இதனால் எடை குறைவாக இருந்தாலும், எடை அதிகரிக்கும் என்ற தீவிர பயத்தால், உணவு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பர். இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 6 மாதங்களாக உணவு எதையும் சாப்பிடவில்லை. சமூக ஊடகமான யூடியூபை பார்த்து உணவு கட்டுப்பாட்டு முறையை பின்பற்றி வந்துள்ளார். மேலும், அதனை பார்த்து வெறும் வெந்நீர் மட்டுமே குடித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் உடல் மெலிந்து காணப்பட்டார். Father Kills Son: குடும்ப தகராறில் மகன் துப்பாக்கியால் சுட்டுக்கொலை.. 76 வயது முதியவர் கைது..!
இளம்பெண் பலி:
இந்நிலையில், கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, சில மாதங்களுக்கு முன், ஸ்ரீநந்தாவை அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் நன்றாக சாப்பிடும்படியும், மனநல ஆலோசனை பெற்றுக் கொள்ளும்படியும் இளம்பெண்ணுக்கு அறிவுறுத்தினர். இருப்பினும், அவர் உணவு எதையும் சாப்பிடவில்லை. கடந்த இரு வாரங்களுக்கு முன், ஸ்ரீநந்தாவின் சர்க்கரை அளவு குறைந்து, சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது. இதனையடுத்து, தலசேரி கூட்டுறவு மருத்துவமனையில் அவரை பெற்றோர் சேர்த்தனர். அப்போது, அவரது உடல் எடை, 24 கிலோவாக இருந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (மார்ச் 10) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.